தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதை அடையாளம் கண்டு கொண்டு, அதன்படி நடத்தல் Jeffersonville, Indiana, USA 60-0221 1இந்த காலை கூட்டத்தின் ஒலிநாடாக்கள் விற்பனைக்கல்ல. அது சபைக்கும் அதிலுள்ள யாருக்காவது மாத்திரமே. ஏனெனில், இது உபதேசத்தைக் கொண்டது. வெளியிலே இது குழப்பத்தை விளைவிக்கும். ஏனெனில் இருவர் இதை ஒரேவிதமாகக் காண்பது கடினம். இருப்பினும் நமது இருதயங்கள் ஒரேவிதமாக இருக்க வேண்டும். நீங்கள் கவனிப்பீர்களானால், இந்த கூடாரத்திலுள்ள நமக்கு மாத்திரமே இந்த ஒலிநாடாக்கள்... அது நண்பர்களுக்கு மாத்திரமே. இப்பொழுது ஜெபத்துக்காக சிறிது நேரம் தலை வணங்குவோம். நீங்கள் தலை வணங்கியிருக்கும் வேளையில், எத்தனை பேர் நினைவுக்கூரப்பட விரும்புகிறீர்கள்? அது இதற்காக இருந்தாலும், உங்கள் கைகளையுயர்த்தி, “கர்த்தாவே, இன்று எனக்குத் தேவையுள்ளது, உமது கிருபை எனக்கு அவசியம்” என்று சொல்லுங்கள். 2எங்கள் பரலோகப் பிதாவே, உமது கிருபாசனத்தை நாங்கள் அணுகுகிறோம். அவ்வாறு செய்ய வேண்டுமென்று எங்களுக்கு கூறப்பட்டுள்ளது. உமது நாமத்தினாலே நாங்கள் எதைக் கேட்டாலும் அது எங்களுக்கு அருளப்படுமென்று உமது குமாரனும் எங்கள் இரட்சகருமாயிருக்கிறவர் எங்களுக்கு உரைத்திருக்கிறார். எனவே கர்த்தாவே, அவருடைய வருகையின் நிழல்களில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்தவர்களாய், உமது இரக்கத்தின் நிழல்களில் இப்பொழுது நின்று கொண்டு நாங்கள் கேட்கும் காரியங்களை நீரே பரிசுத்த ஆவியானவர் முலம் தேர்ந்தெடுத்து எங்களுக்கு அளிக்க வேண்டுகிறோம். பரிசுத்த ஆவி எங்களை இன்று விசேஷித்த விதத்தில் சந்தித்து, எங்கள் மத்தியில் வந்து, எங்கள் இருதயங்களிலுள்ள சிந்தனைகளை பகுத்தறிந்து, எங்கள் பலவீனமான இடங்களை எங்களுக்கு வெளிப்படுத்தி தந்து, எங்கள் வியாதிகளினின்று எங்களை சுகப்படுத்தி, இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு காயங்கட்டி, இழந்து போனவர்களை இரட்சித்து, உமது வருகைக்கென்று ஒரு கூட்டம் ஜனத்தை ஆயத்தப்படுத்த வேண்டுமென்று உம்மிடம் கேட்பது, உமது வார்த்தைக்கும், உமது மகத்தான நீதிக்கும், உமது இரக்கத்துக்கும், கிருபைக்கும் முரணாயிருக்காது என்பதை இக்காலையில் உணருகிறோம். கர்த்தாவே, இந்த ஜெபத்தைக் கேட்டருளும். 3இப்பொழுது நாங்கள் உம்முடைய வார்த்தையைப் படிக்கப் போகின்றோம். இக்காலையில் அளிக்கப்படவிருக்கும் ஞாயிறு பள்ளி பாடத்தில் நீரே படித்த அந்த பாகத்தின் பொருளை விளக்கி, எங்கள் இருதயங்களுக்கு வெளிப்படுத்தித் தருமாறு வேண்டிக் கொள்கிறோம். ஏனெனில், இங்கு நாங்கள் கூடி வந்திருப்பது ஒரே ஒரு நோக்கத்துக்காகவே. அந்த நோக்கம் என்னவெனில், உம்மை இன்னும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதே. விசுவாசத்தின் மூலம் கிறிஸ்தவர்களாய் இருக்கும் நாங்கள் உம்மை இன்னும் நன்றாக அறிந்து கொள்ள வாஞ்சிக்கிறோம். இன்னும் கிறிஸ்தவர்களாகாதவர்கள் உம்மை தங்கள் இரட்சகராக அறிந்து கொள்ள வாஞ்சிக்கின்றனர். வியாதியஸ்தர்கள் உம்மை தங்கள் சுகமளிப்பவராக அறிந்து கொள்ள வாஞ்சிக்கின்றனர். இங்குள்ள ஒருவராவது வெறுமையாய் போகாமல், அவர்களுடைய விண்ணப்பங்கள் ஒவ்வொன்றும் பூரணமாக நிறைவேறவும், அவர்களுடைய விருப்பங்கள் பூர்த்தியாகவும், ஒவ்வொரு நபரும் சந்தோஷத்தோடு இக்கட்டிடத்தை விட்டுச் சென்று, எம்மாவூர் சீஷர் கூறினது போன்று, அவர் வழியிலே நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா? என்று அவர்களும் கூற அருள் புரியும். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 4உங்கள் வேதாகமத்தை திருப்ப விரும்புகிறவர்கள். சுவிசேஷ ஆராதனைகளில் நான் வழக்கமாக காண்பது என்னவெனில், இருபது அல்லது முப்பது நிமிடங்களுக்கு அளிக்கும் ஒரு ஆவிக்குரிய செய்தி ஒரு சிறந்த மாற்றத்தை ஜனங்களில் உண்டாக்குகிறது. அதன் பிறகு பீட அழைப்பு கொடுக்கப்படுகின்றது. ஆனால் இது ஞாயிறு பள்ளியாக இருக்கும் காரணத்தால், இக்காலை வேளையில் அப்படி செய்ய எனக்குப் பிரியமில்லை. என் நேரத்தை நான் எடுத்துக் கொண்டு, வார்த்தையின் பேரில் பேசவே நான் அதிகமாக ஏவப்படுகிறேன். 5இங்கு அதிக குளிர்ச்சியாயிருந்து, யாருக்காவது அசெளகரியமாக இருந்தால், நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று... இந்தக் கட்டிடக் காப்போனாகிய என் சகோதரன் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரிடம் உங்கள் கையை இப்படி உயர்த்தி காண்பித்தால், அவர் வெப்பத்தை அதிகரித்து விடுவார். நீங்கள் செளகரியமாகவும், நல்லுணர்வுடனும் இங்கு உட்கார்ந்து கொண்டு, பேசப்படும் சொற்களுக்கு செவி கொடுக்க விரும்புகிறோம். பரிசுத்த ஆவி தேவனுடைய வார்த்தையைப் போதிக்க அவரை நாம் சார்ந்திருக்கிறோம். பின்னாலுள்ளவர்களுக்கு நன்றாக கேட்கிறதா? அப்படியானால் - உங்களால் நன்றாக கேட்க முடிந்தால் - உங்கள் கைகளை உயர்த்துங்கள். அது நல்லது. 6இங்கு சில குறிப்புகளையும், சில வேதவாக்கியங்களையும் எழுதி வைத்திருக்கிறேன். என்னுடன் நீங்கள் முதலாவதாக ரோமருக்கு எழுதின நிரூபம் 9ம் அதிகாரத்துக்கு உங்கள் வேதாகமத்தை திருப்புங்கள். நம்முடைய வேத பாடத்திற்கென்று முதலாவதாக ரோமர்.9:11ஐ படிக்க விரும்புகிறோம். பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை, தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே, நிலை நிற்காமல் அழைக்கிறவராலே நிலை நிற்கும்படிக்கு, மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ் செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது. அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது. ரோமர்.9:11-13 தேவன் தாமே வாசிக்கப்பட்ட இந்த வசனங்களுடன் தமது ஆசீர்வாதத்தை கூட்டுவாராக. என் பாடத்துக்கு ஆதாரமாக: தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதை அடையாளம் கண்டு கொண்டு, அதன்படி நடத்தல் என்னும் பொருளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதை மறுபடியும் கூறுகிறேன்: தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதை அடையாளம் - கண்டு கொண்டு, அதன்படி நடத்தல். 7இரவும், பகலும் வேத வசனங்களை ஆராய்ந்து, செய்தித்தாள்களைப் படித்து, வானொலியில் செய்தி படிப்பவர்கள் படிக்கும் செய்தியைக் கேட்கும் நமக்கு, இந்த உலகம் இருவிதமான மகத்தான ஆவிக்குரிய சக்திகளின் பிடியில் உள்ளது என்பது மிகத் தெளிவாயுள்ளது. இவ்விரண்டுமே மத சம்பந்தமான சக்திகள். இந்த சக்திகள் விரைவில் உச்ச நிலையை அடையும் என்று நான் கருதுகிறேன். இந்த இரண்டு சக்திகளுக்கும், ஈசாக்கின் இரண்டு புத்திரர் எடுத்துக்காட்டாயுள்ளனர். தேவன் தம்முடைய அளவில்லாத ஞானத்தின் மூலம் எல்லாவற்றையும் நமக்கு முன் நிழல்களாக அளித்து, நமக்கு முன்னால் என்ன வைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிந்து கொள்ளும்படி செய்தார். இதை அவர் நமக்கு மிகவும் தெளிவுபடுத்தி தந்திருக்கிறார். தேவனும் அவருடைய வார்த்தையும், இயற்கையும் அண்ட சராசரங்களும் பூரணமாக ஒன்றுக்கொன்றும் ஒழுங்காக அமைக்கப்பட்டுள்ளதால் பாவியும் கூட ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறான், தேவன் அதை அவ்வளவு ஒழுங்காக அமைத்திருக்கிறார். எனவே சாக்குபோக்குக்கு யாருக்குமே இடமில்லை. 8இந்த இரண்டு பிள்ளைகளை நாம் பார்க்கும்போது, அவர்கள் பிறப்பதற்கு முன்னமே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடைய கன்னித் தாய்... அந்த அழகுள்ள ரெபேக்காள் தன் கன்னிப் பருவத்தில் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நீதியுள்ள சந்ததியாகிய ஈசாக்கை மணந்தாள். இவர்கள் இருவருமே தேவனுக்கென்று தங்களை அர்ப்பணித்து. ஆவியினால் நிறைந்த தேவனுடைய விசுவாசிகளாய், இவர்களை இணைத்த இந்த விவாகத்திற்கென்று முன் குறிக்கப்பட்டிருந்தனர். தேவன் அதை முன்னறிந்தார். அப்படிப்பட்ட ஒன்று எவ்வாறு அந்த தாய் தகப்பனின் மூலம் தோன்றினது? ஒருவன் மிகவும் பொல்லங்கன், மற்றவன் மிகவும் நல்லவன். நல்லவன் பொல்லாங்கனாக காட்சியளித்தான், பொல்லாங்கன் நல்லவனாக காட்சியளித்தான். அது எக்காலத்தும் தேவனுடைய திட்டமாக இருந்து வந்துள்ளது. அது இனிமேலும் அப்படியே இருக்கும், தேவன் தம்முடைய திட்டத்தை ஒருபோதும் மாற்றுவதில்லை. ஏனெனில், அவர் தமது திட்டத்தை பரிபூரணமாகச் செய்திருக்கிறார், அது அவருடைய ஒரு பாகம். 9ஏதேன் தோட்டத்தில், பாவம் மிகவும் அழகாயிருந்ததன் விளைவாக, அது ஏவாளை, நீதியிலிருந்து பாவத்துக்கு கவர்ந்தது. அதே தோட்டத்தில், ஜீவ விருட்சம் இருந்த இடத்தில், மரண விருட்சமும் இருந்தது. இதை இன்று நாம் முரண்பாட்டின் விதி (law of contrast) என்றழைக்கிறோம். அதாவது நன்மை உள்ள இடத்தில் தீமையும் உள்ளது. சரியானதொன்று உள்ள இடத்தில் தவறும் உள்ளது. நமது சூழ்நிலை என்னவாயிருந்த போதிலும், இவ்விரண்டிலிருந்தும் நம்மை ஒருக்காலும் பிரித்துக் கொள்ள முடியாது. பவுல், நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்று காண்கிறேன்“ என்றுரைக்கிறான் (ரோமர்.7:21). பாவி தன்னைக் கிறிஸ்தவனிடத்திலிருந்தும், கிறிஸ்தவன் தன்னைப் பாவியினிடத்திலிருந்தும் ஒருக்காலும் பிரித்துக் கொள்ள முடியாது. எப்பொழுதுமே சரியான சாட்சியும், தவறான சாட்சியும் இருந்து கொண்டேயிருக்கும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ஏதாவதொன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 10ஆனால் இந்த இரு குமாரர்களும் - வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஈசாக்கின் குமாரர்கள். நமது பாடம் சிறிது நீளமாயிருக்கும். ஆனால், நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்பதை நீங்கள் சரிவர புரிந்து கொள்ள, போதுமான முன்னுரையை கூற முற்படுகிறேன். முதலாவது பிறந்தவன் ஏசா. இருவரும் தங்கள் தாயின் கர்ப்பத்தில் இருந்தபோது சண்டையிட்டுக் கொண்டிருந்தது மாத்திரமல்ல, அவர்கள் பிறக்கும் போதும் சண்டையிட்டுக் கொண்டே பிறந்தனர். ஏசா வெளி வந்தபோது, யாக்கோபு அவன் குதிங்காலைப் பிடித்துக் கொண்டு வெளி வந்தான். அவர்கள் இப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். 11அது எப்படி பரிபூரணமான, தூய்மையான, தெரிந்து கொள்ளப்பட்ட, பரிசுத்தமான, தங்களை அர்ப்பணித்த தாய், தகப்பனிடமிருந்து தோன்றக் கூடும்? அதை ஆதாரமாகக் கொண்டு, தேவன் தெரிந்து கொள்ளுதலின்படி அழைக்கிறார் என்பது உறுதிப்படுகிறது. அது அப்படித்தான் இருக்க வேண்டும். உங்கள் தகப்பனும், தாயும் எவ்வளவு நல்லவர்களாகவும், அருமையானவர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருந்த போதிலும், தனிப்பட்ட நபர் என்னும் முறையில் தேவனுடைய முன்னிலையில் உங்கள் நிலை என்னவென்பதை அது பொறுத்தது. இந்த பாடம் அதை தான் போதிக்கிறது. அந்த பிள்ளைகளின் தகப்பனும், தாயும் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு அழைக்கப்பட்டவர்கள். அவர்கள் கன்னிகையும் பரிசுத்த மனிதனுமாயிருந்தனர். முடிவில் அவனுடைய சந்ததியில் இயேசு தோன்றினார். ஈசாக்கு மரித்தோரிலிருந்து பிறந்தவனாக பெற்றுக் கொள்ளப்பட்டான். அவன் சோதிக்கப்பட்டான். அவனுக்கு முன்பு, அவனுடைய தகப்பன் சோதிக்கப்பட்டான். ஈசாக்கின் சந்ததியின் மூலம் முழு உலகமே இரட்சிக்கப்படும் என்று அவனுக்கு வாக்களிக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு மனிதனிலிருந்து அவனுடைய இரத்தம் மிகவும் தூய்மையானது. அவனுடைய தாயை ஆபிரகாம் பெலிஸ்திய ராஜாவுக்கு கொடுத்த பின்பும், அவன் அவளைத் தொட கர்த்தர் அனுமதிக்கவில்லை. தேவன் அவனுடைய குடும்பத்தை வாதித்து, நீ செத்தாய் என்றார். இப்படியாக அந்த இரத்த ஒட்டத்தை அவர் சுத்தமாகக் காத்துக் கொண்டார். அப்படிப்பட்ட நீதியுள்ள, பரிசுத்தமுள்ள, தேவனால் அனுப்பப்பட்ட, தேவனால் அழைக்கப்பட்ட தாயின் கர்ப்பத்திலிருந்து ஒரு துரோகியும் ஒரு விசுவாசியும் பிறக்கின்றனர். பாருங்கள், எனவே அது தேவனுடைய அழைப்பை, தேவனுடைய தெரிந்து கொள்ளுதலைப் பொறுத்தது. 12இவர்கள் இருவரும் பிறப்பதற்கு முன்பே தேவன், நான் யாக்கோபை சிநேகித்து. ஏசாவை வெறுக்கிறேன் என்றார் - அவர்கள் பிறப்பதற்கு முன்பே. தேவன் நம்முடன் பேசி, நம்மை அவருடைய வீட்டுக்கு, அவருடைய குமாரனாக அல்லது குமாரத்தியாக இருப்பதற்கு அழைப்பாரானால், நமக்கு எத்தகைய மகிழ்ச்சி உண்டாகும்! அதைக் காட்டிலும் பெரியது வேறெதுவுமேயில்லை. இந்த இரு பையன்களின் சுபாவத்தை நாம் கவனிப்போமானால், ஒருவன் ஆவிக்குரிய மனிதன், அது யாக்கோபு. மற்றவன் ஏசா, மாம்சத்துக்குரியவன். ஆனால் இருவருமே பக்தியுள்ளவர்கள். காலங்கள் தோறும் இதேவிதமாக இருந்து வருகிறது - மாம்சத்துக்குரியவன், ஆவிக்குரியவன்... ஏசா, பூமிக்குரிய. இயற்கையான, மதத்தை பக்தியோடு பின்பற்றும் மனிதனுக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறான். ஆனால் உலகத்தின் காரியங்களை, மாம்சப்பிரகாரமான காரியங்களைக் கடந்து அதற்கும் மேலே செல்ல வேண்டும் என்னும் மனப்பான்மை அவனுக்குள் இல்லை, அவனால் அப்படி செய்ய முடியவில்லை. ஆனால், யாக்கோபுக்கோ அப்படி செய்வது மிகவும் எளிதாயிருந்தது. யாக்கோபுக்கு ஒரே ஒரு நோக்கம் இருந்தது. அவன் அந்த சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற வாஞ்சித்தான். அதை எந்த முறையில் பெற வேண்டுமென்று அவன் கவலை கொள்ளவில்லை, அவன் எப்படியும் அதை பெற வேண்டும். அவன் அதைப் பெற்றுக் கொண்டான். 13அன்றைக்கு நடந்த அந்த பிறப்பின் ஆவி இன்று வரைக்கும் உலகில் இருந்து வந்து, இப்பொழுது உச்சக்கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறது. ஆவிக்குரிய விசுவாசி, மாம்சப்பிரகாரமானவன், மாம்சப்பிரகாரமான விசுவாசி. அவர்கள் இருவரும் பக்தியுள்ளவர்கள் அல்ல என்று யாருமே கூற முடியாது. அவர்கள் பக்தியுள்ளவர்களே. ஒருவன் விக்கிரகத்தை வழிப்பட்டான் என்றும், மற்றவன் தேவனை வழிபட்டான் என்றும் கூறப்படவில்லை. இருவருமே தேவனுடைய ஊழியக்காரர். இந்த பொருளின் பேரிலுள்ள வேத வாக்கியங்களுக்கு உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள். அது உங்களுக்கு உதவியாயிருக்கும். பாருங்கள்? “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.'' (மத். 7 : 21). 14நீங்கள் கவனிப்பீர்களானால், யாக்கோபுக்கு ஒன்று மாத்திரமே தேவையாயிருந்தது. ஏனெனில் வார்த்தையின் பிரகாரம், ஆசீர்வாதங்களும் நல்ல காரியங்களும் சேஷ்டபுத்திரபாகத்தில் அடங்கியுள்ளது. யாக்கோபின் குறிக்கோள் ஒன்றே ஒன்று தான். அவனுடைய மனதில் இருந்த ஒரே எண்ணம், எப்படியாகிலும் சேஷ்டபுத்திரபாகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் ஏசாவோ, அதை இகழ்ந்தான். அதை உண்மையில் பெற்றிருந்தவன் அதை இகழ்ந்தான், அல்லது அதைக் குறித்து வெட்கப்பட்டான். ஆனால், யாக்கோபோ அதை பெற விரும்பினான். அதை எந்த வழியில் பெற்றாலும் கவலையில்லை. அவன் அதை பெற்றே தீர வேண்டும் என்று எண்ணினான். இன்றைய ஆவிக்குரிய விசுவாசியும் அப்படித்தான் இருக்கிறான். மற்றவர்கள் எவ்வளவாக அவனைப் பார்த்து சிரித்தாலும் அவன் கவலை கொள்வதில்லை, எவ்வளவாக மற்றவர்கள் அவனைக் கேலி செய்தாலும், மாமிசப் பிரகாரமான சிந்தைக்கு அவன் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்வதாக காணப்பட்டாலும், அவனுடைய ஒரே குறிக்கோள் சேஷ்டபுத்திரபாகமே. அவன் தேவனை அடைய விரும்புகிறான். ஏனெனில், அது அவனுக்குள் பிறந்திருக்கிறது. அவனுக்கு வேறு வழியயிேல்லை. 15யாக்கோபு என்றால் ''எத்தன்'' அல்லது “ஏமாற்றுபவன்'' என்று பொருள். ஆனால் அவன், சேஷ்டபுத்திரபாகத்தின் முக்கியத்துவத்தை கண்டு கொண்டு, அதைப் பெற்றுக் கொண்ட பின்பு அவன் மாறிவிட்டான். அவனுடைய மாமிச சிந்தை மாறிவிட்டது. அப்பொழுது அவன் இஸ்ரவேல் கர்த்தருடைய ராஜகுமாரன் என்றழைக்கப்பட்டான். அவன் அவருடன் போராடினான்... இன்றைய மாம்சப்பிரகாரமான விசுவாசி, “நான் ஆலயத்துக்கு சென்று நன்மையானதைச் செய்து வருகிறேன். வேறு என்ன வேண்டும்?'' என்கிறான். அதுதான் ஏசாவின் கூட்டம். அவன் இப்பொழுதும் கேலி செய்து. சேஷ்டபுத்திரபாகத்தை இகழ்கிறான். அதைக் குறித்து அவன் கவலைப்படுவதில்லை. ஆனால் யாக்கோபோ அதை நேசித்தான்.” தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு, நித்திய ஜீவனைப் பெற முன் குறிக்கப்பட்டுள்ள இன்றைய ஆவிக்குரிய மனிதரும் ஆவிக்குரிய ஸ்திரீகளும், தங்களுக்குள்ள எல்லாவற்றையும் விற்க வேண்டும் என்னும் நிலை ஏற்பட்டு, தங்கள் பெயர் தேசத்தில் காணப்படும் ஒவ்வொரு சபையிலுமுள்ள புத்தகத்திலிருந்து எடுக்கப்பட நேர்ந்தாலும், அப்பொழுதும் அவர்கள் சேஷ்டபுத்திரபாகத்தையே விரும்புவார்கள். அது ஒன்று தான் அவர்களுக்கு முக்கியம் வாய்ந்தது. சேஷ்டபுத்திரபாகத்தை பெற வேண்டும், அவ்வளவுதான். அவர்கள் எப்படி அதை பெற்றுக் கொண்டாலும், அதற்கென அவர்கள் எந்த மட்டத்துக்கு வர நேரிட்டாலும், அவர்கள் பீடத்துக்கு சென்று அங்கு, உ,ஊ என்று அழ வேண்டியதாயிருந்தாலும், அவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு ஓடிச் சென்று காரியங்களை சரிபடுத்த வேண்டியதாயிருந்தாலும், அவர்களுக்குள்ள எல்லாவற்றையும் விற்று, அல்லது அவர்களுக்குள்ள எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு அந்நியரும், பரதேசிகளுமாக நேர்ந்தாலும், அதனால் பாதகமில்லை. அவர்களுக்கு வேண்டியது சேஷ்டபுத்திரபாகமே. அதில் மாத்திரமே அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர். அந்த ஜனங்களை குறை கூறாதீர்கள். அவர்களால் அப்படி செய்யாமலிருக்க முடியாது. அதற்கென்று அவர்கள் முன்குறிக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றனர். 16இந்த இருவகையினரை நாம் காண்கிறோம் - மாம்சப் பிரகாரமான. ஜனங்கள், ஆவிக்குரிய ஜனங்கள், அது எக்காலத்தும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. இன்றைக்கும் அது அவ்வாறே உள்ளது. ஏதேன் தோட்டத்தில் காயீனும், ஆபேலும். ஏதேன் சிருஷ்டிக்கப்பட்ட போது, மனிதன் தெரிந்து கொள்வதற்கென அங்கு இரண்டு மரங்கள் இருந்தன. அவைகளில் ஒன்று அவனுக்கு ஞானத்தைத் தந்திருக்கும், மற்றது அவனுக்கு ஜீவனைத் தந்திருக்கும். அங்கு இரண்டு பையன்கள் இருந்தனர்; காயீன், ஆபேல். இருவருமே பக்தியுள்ளவர்கள். ஆபேல் நித்திய ஜீவனை ஆசித்து, விசுவாசத்தினாலே காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியைச் செலுத்தினான். இன்று காணப்படும் மாம்சப்பிரகாரமான சபை, ஆவிக்குரிய சபை இவைகளுக்கு அது பரிபூரண முன்னடையாளமாகத் திகழ்கிறது. இப்பொழுது இவ்விரு சாரார்களிடமும் நான் பேசுகிறேன் என்பதில் ஐயமில்லை. ஒலிநாடாவின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களிடம் பேசுவேன். 17கவனியுங்கள், இந்த மாம்சப்பிரகாரமான சபையிலுள்ளவர்கள், “நான் சபையைச் சேர்ந்திருக்கிறேன். நான் சபைக்கு சென்று, என்னால் முடிந்ததை செய்கிறேன். அதை தான் தேவன் கேட்கிறார் என்பதை விட உயர்வான நிலையை அடைய முடியாது. காயீனும் அதை தான் செய்தான். அவன் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, நிலத்தின் கனிகளைக் கொண்டு வந்து தேவனுக்கு செலுத்தி, ”இதோ தேவனே. இதுதான் எனக்குள்ளவைகளில் மிகச்சிறந்தது. விருப்பமிருந்தால் ஏற்றுக்கொள்ளும், இல்லாவிட்டால் விட்டுவிடும்“ என்றான். இன்று மாமிசப் பிரகாரமான விசுவாசியும் அப்படித்தான் விசுவாசிக்கிறான். ”கர்த்தாவே, நான் சபைக்கு செல்வேன், எனக்குத் தெரிந்த மிகச்சிறந்த குழுவைச் சேர்ந்து கொள்வேன். சபைக்கு செலுத்த வேண்டிய சந்தாவை செலுத்தித் தீர்ப்பேன். எது சரியோ அதை செய்வேன். இதுதான் என்னால் செய்ய முடிந்தது. அந்த விதவை அடுப்பு மூட்ட அவளுக்கு நிலக்கரி வாங்கித் தருவேன். பிள்ளைகளுக்கு சில துணிமணிகளைத் தருவேன். இவையெல்லாம் நல்லது தான். அதற்கு விரோதமாக நான் பேச வரவில்லை. ஆனால், “இவ்வளவு மாத்திரம் தான். விருப்பமிருந்தால் ஏற்றுக்கொள்ளும். இல்லையென்றால் நீர் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது தான் இன்றைய மாம்சப்பிரகாரமான சபையின் மனப்பான்மையாய் உள்ளது. 18ஆனால் ஆவிக்குரிய சபை! வெளிப்பாட்டின் மூலம் ஆபேல், கிருபையினால், அதைக் காட்டிலும் அப்பால் கண்டு, விசுவாசத்தினாலே காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியைச் செலுத்தினான். அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான். தேவனே சாட்சி கொடுத்தார். இஸ்மவேல் ஈசாக்கின் விஷயத்திலும் அது தான் நடந்தது. ஒருவன் மாம்சப்பிரகாரமானவன், மற்றவன் ஆவிக்குரியவன். ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், மற்றவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். இஸ்ரவேலர், மோவாபியர் விஷயத்திலும் அவ்வாறே நடந்தது. இரண்டு பெரிய சபைகள் ஒன்றாக வந்தன. ஆவிக்குரிய சபை, யாக்கோபின் மக்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைய வழியில் சென்று கொண்டிருந்த போது, ஏசாவின் ஜனங்களான மோவாபியர், அதிகாரம் மிக்க சபை, அவர்களை வழியில் சந்தித்தனர். அந்த சபையின் மகத்தான தலைவன் பிலேயாம். அவனுடைய சகோதரரை சபிக்க அங்கு வருகிறான். ஆனால், அவனால் சபிக்கக் கூடாமல் போயிற்று. அவனுடைய குருட்டுத் தன்மையின் நிமித்தம், முன்குறித்தலின் திட்டத்தையும், தேவனுடைய வார்த்தையையும் அவன் காணத் தவறினான். விசுவாசம் கேள்வியினால் வரும் கேட்பதினால் வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினால் வரும். அதாவது விசுவாசம் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதனால் வருகிறது. விசுவாசி அதைக் கேட்டு, அதை அடையாளம் கண்டு கொண்டு, அதன்படி நடக்கிறான். மாம்சப்பிரகாரமான மனிதன் அதைக் கேட்கிறான், அது கூறப்படுவதன் சத்தத்தை. ஆனால் அவன் ஒருபோதும்... கேட்டல் (Hear) என்றால் ''புரிந்து கொள்ளுதல்“ என்ற பொருள். ஒருவன் ஏதாவதொன்றை பார்த்துக் கொண்டேயிருக்கக் கூடும். ஆனால் அது அவனுக்கு புரியாமல் இருக்கக்கூடும். ஆனால் காண்பது (See) புரிந்து கொள்ளுதல் ஆகும். ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் - அதாவது புரிந்துகொள்ள மாட்டான். 19இதோ இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் கொண்டவர்களாய் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் விசுவாசிக்கும் அதே தேவன் பேரில் விசுவாசங் கொண்டவர்கள் - தேவனை நம்பாதவர்கள் அல்ல - அங்கு வந்து தங்கள் சகோதரரை சபிக்க முற்படுகின்றனர். ஏனெனில், அவர்களுடைய சகோதரர் அநீதியுள்ளவர்கள் என்றும் அவர்கள் அநேக தவறான செயல்களைப் புரிந்ததாகவும் அவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால், பாருங்கள், அவர்கள் முன் குறித்தலைக் காணத் தவறினர். ஏசா, யாக்கோபின் விஷயத்திலும் அப்படித்தான்! ஏசா யாக்கோபை விட நல்லவன் என்பது போல் காணப்பட்டது. அவன் நன் கொடைகள் அநேகம் தந்தான். அவன் பார்வையிழந்த தன் தகப்பனை கவனித்துக் கொண்டு, அவனுக்கு மான் இறைச்சி கொண்டு வந்து கொடுத்தான். அவன் நல்ல பையனாயிருந்தான். மத சம்பந்தமான விஷயத்தில் மாம்சப்பிரகாரமான விசுவாசிகள் சங்கங்களுக்கு உதவி செய்தல், ஏழை ஜனங்களுக்கு மருத்துவமனை செலவை செலுத்துதல் போன்ற அநேக நல்ல காரியங்களை செய்கின்றனர். ஆனால், நான் அதைக் குறித்து இப்பொழுது பேசவில்லை. 20மோவாபியர் ஒரு நல்ல, பெரிய ஜாதி. அவர்கள் இஸ்ரவேலருக்கு சகோதரர். யாக்கோபு எல்லாவற்றையும் செய்தான். அவன் தன் குடும்பத்தை விட்டு ஓடியவன். இருப்பினும் அவன் ஒன்றைப் பெற விரும்பினான். அதுதான் அந்த வாக்குத்தத்தம் - சேஷ்டபுத்திரபாகம். யாக்கோபின் புத்திரரான இஸ்ரவேல் ஜனங்களும் அதே குறிக்கோளுடன் வருகின்றனர். இவர்கள் இருவரில் யார் சரி? பிலேயாம் ஏழு பலிபீடங்களைக் கட்டினான், இஸ்ரவேலிலும் ஏழு பலிபீடங்கள் இருந்தன. பிலேயாம் சுத்தமான மிருகங்களை ஏழு பலிகளாக செலுத்தினான். இஸ்ரவேலரும் சுத்தமான மிருகங்களை ஏழு பலிகளாக செலுத்தினர். சடங்காச்சாரத்தை பொறுத்த வரையில் மோவாபியர் இஸ்ரவேலரைப் போலவே பக்தியுள்ளவர்களாயிருந்தனர். அவ்வாறே ஏசாவும் யாக்கோபைப் போலவே பக்தியுள்ளவனாயிருந்தான். காயீனும், ஆபேலைப் போலவே பக்தியுள்ளவனாயிருந்தான். ஆனால், தெரிந்து கொள்ளப்படுதலே முக்கியம் வாய்ந்தது! 21ஆவிக்குரிய விதமாகப் பார்க்கப்போனால், ஏசாவின் புத்திரர் எவ்வளவு குருடாயிருந்தனர். மோவாபியர் இஸ்ரவேலரை மோசமாக எண்ணி பாருங்கள். அவர்கள் ஒரு ஸ்தாபனமாக இல்லை. அவர்கள் ஊர் சுற்றுபவர்கள். அவர்கள் கூடாரங்களில் வசிக்கின்றனர். நாமோ ஒரு பெரிய ஜாதி. அவர்கள் பொல்லாப்பு செய்தனர். அவர்களுக்கு ஸ்தாபனம் எதுவுமில்லை. அவர்கள் ஒரு தீர்க்கதரிசியை பின் தொடர்ந்து நெளிந்து செல்கின்றனர் என்றனர். ஆனால், அவர்களோ அவர்களுக்கு முன்பாக சென்ற வெண்கல சர்ப்பத்தையும் அடிக்கப்பட்ட கன்மலையையும் காணத்தவறினர். வெளியே அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்ட கூட்டம் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படிந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் காணத்தவறினர். இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. அவர்கள், ''இது உருளும் பரிசுத்தர்களின் கூட்டம். இவர்கள் இது, அது, மற்ற கூட்டம்'' என்கின்றனர். ஆனால், இந்த கூட்டம் தேவனுடைய வார்த்தையின் கட்டளையைப் பின்பற்றுகிறது என்பதைக் காணத் தவறுகின்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு போகும் வழியில் சென்று கொண்டிருந்தனர். தேவன் தமது வார்த்தையில் வாக்குத்தத்தம் செய்திருந்தார். 22யாக்கோபு எப்படியாயினும், சேஷ்டபுத்திரபாகத்தை அடைந்தே தீர வேண்டும் என்று எண்ணின காரணம் என்னவெனில், அந்த சேஷ்டபுத்திரபாகம் ஆசீர்வாதங்களைக் கொண்டிருந்தது என்று அவன் அறிந்திருந்தான். அதை அவன் எம்முறையில் பெற்றுக் கொண்டாலும் கவலையில்லை, அது அவனுக்கு வேண்டியதாயிருந்தது. அதுதான் முக்கியமான காரியம். அது எந்த வழியில் கிடைத்தாலும் கவலையில்லை, அது அவனுக்குத் தேவை, அவன் அதை அடைந்தே தீர வேண்டும். அப்படியே அவன் அதை பெற்றுக் கொண்டான். “நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள். (மத்.5:6). அவன் அதன் பின்னால் அந்த வழியில் சென்றான், அதை பெற்றுக் கொண்டான். இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு போகும் பாதையில் சென்று கொண்டிருந்தனர். எத்தனை மோவாபியர்கள் அவர்கள் மேல் சாபத்தைக் குவித்த போதிலும், அவர்கள் நேராக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் சென்றனர். இன்றைக்கு நீங்கள் ஒருக்காலும்... அவர்கள் எத்தனை சட்டங்களை வைத்திருந்தாலும், எவ்வளவு தண்டனை இருந்தாலும், எவ்வளவு துன்புறுத்தல் இருந்தாலும், எவ்வளவு தீமையான காரியங்களை அவர்கள் கூறினாலும், எத்தனை முறை அவர்கள் உருளும் பரிசுத்தர் என்றழைத்தாலும், எத்தனை முறை வசைச் சொற்கள் கூறினாலும், சபையானது சென்று கொண்டேயிருக்கும். அது செல்ல வேண்டும். ஏனெனில், அது தேவனுடைய வார்த்தையில் நிலை கொண்டுள்ளது. 23ஒரு சமயம் இரு ராஜாக்கள் ஒன்று கூடினர். ஒருவன் ஆகாப், பொல்லாங்கன், மற்றவன் யோசாபாத். மாம்சப் பிரகாரமான சபையும், ஆவிக்குரிய சபையும். ஆகாப் ஒரு எல்லைக்கோடு விசுவாசி. அவனுக்கு தீர்க்கதரிசிகள் இருந்தனர். அவர்கள் தேவனை நம்பாதவர்கள் அல்ல, அவர்கள் விக்கிரகாராதனைக்காரர் அல்ல. அவர்கள் இஸ்ரவேல் தீர்க்கதரிசிகள். அவர்கள் அனைவரும் ஆகாபினால் கற்பிக்கப்பட்டு, போஷிக்கப்பட்டு உடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு அரசியல் ஆதரவு இருந்தது. யோசபாத் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். அது தவறு. நீங்கள் அவிசுவாசிகளுடன் உங்களை ஒருபோதும் இணைத்துக் கொள்ளக் கூடாது. நாம் எக்காரணத்தைக் கொண்டும் நம்முடைய பெயர்களை முழு சுவிசேஷத்தில் நம்பிக்கையில்லாத சபைகளின் புத்தகங்களில் எழுத அனுமதிக்கக் கூடாது. ஒருக்காலும் அப்படி செய்யக் கூடாது! நீங்கள் தொல்லையில் அகப்பட்டுக் கொள்வீர்கள். அவர்கள் தொல்லையில் அகப்பட்டுக் கொண்டனர். இந்த நீதிமான், நாம் கிலேயாத்திலுள்ள ராமோத்துக்கு போகலாமா என்று முதலில் கர்த்தரிடத்தில் விசாரிக்க வேண்டாமா? என்றான். அந்த அமைப்பு எவ்வளவு பிழையற்றது போல் காணப்பட்டது என்பதைப் பாருங்கள். கீலேயாத்திலுள்ள ராமோத் நமக்கு சொந்தம். அது நம்முடைய சொத்து. சீரியர்கள் அதை ஜீவனுள்ள தேவனிடமிருந்து கைப்பற்றிக் கொண்டனர். நாம் ஏன் போய் அதை கைப்பற்றக் கூடாது? அவன் மிகவும் அழகாகவும், சட்ட பூர்வமாகவும், நீதியாயும் சொற்பொழிவு ஆற்றினான். யோசபாத் அதில் மயங்கினான். 24இன்றைக்கு மனிதன் பிரசங்கபீடத்தில் நின்று கொண்டு, கல்வியறிவு கொண்டவனாய். அறிவுத்திறன் கொண்ட சொற்பொழிவாற்றி, பரிசுத்த ஆவியின் வல்லமையையும், தெய்வீக சுகமளித்தலையும், அந்நிய பாஷை பேசுதல் அதற்கு அர்த்தம் உரைத்தல் போன்றவைகளையும், தன் பேச்சுத் திறனைக் கொண்டு. வேதாகமத்தில் இல்லை என்று விளக்கி, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வேறொரு காலத்துக்குரியது என்று கூறுகிறான். ஆனால் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மனிதன், ஒரு மனிதன்... “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன.'' தேவனுடைய தெரிந்து கொள்ளுதல் உங்கள் மேல் இருக்குமானால், அது ஒருக்காலும் உங்களை இடறப்பண்ணாது. யோசபாத் என்னும் நீதியுள்ள ராஜா, “நாம் கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு, தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா? என்று கேட்டான். ஆகாப் அந்த தீர்க்கதரிசி இல்லாமலேயே சென்று கொண்டிருந்தான். மாம்சப்பிரகாரமான சபையும் இன்று அதை தான் செய்து கொண்டிருக்கிறது. ஓ, அவர்களுடைய வேத சாஸ்திர பள்ளிகள் மேதைகளால், பேராயர்களால், அறிவுத்திறன் கொண்ட, நகைச்சுவையுடன் பேசும் - ஆவிக்குரிய சபையிலிருப்பவர்களைக் காட்டிலும் அதிக நகைச்சுவையுடன் பேசும் - போதகர்களால் நிறைந்துள்ளது. 25நோவாவின் காலத்திலிருந்த மாம்சப்பிரகாரமான சபையைப் பாருங்கள். அவர்கள் யார்? விஞ்ஞானிகள், கட்டிடம் கட்டுபவர்கள், அறிவாளிகள். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய ஏனோக்கும், நோவாவும் ஆடு மேய்ப்பவர்கள், விவசாயிகள், தாழ்மையுள்ளவர்கள், படிக்காதவர்கள், அறிவுத்திறன் இல்லாதவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் தேவனை அறிந்திருந்தனர். அவர்களுக்குள்ளிருந்த ஏதோ ஒன்று அசைந்து அழைத்தது. அதற்கு நாம் சற்று பின்பு வருவோம். யோசபாத், தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இல்லையா? என்று கேட்டான். ஓ, நிச்சயமாக, மாம்சப்பிரகாரமான சபை அவர்களைப் பெற்றுள்ளது. நிச்சயமாக எங்களிடம் இருக்கிறார்கள். எனக்கு ஒரு வேத சாஸ்திர பள்ளி அங்குள்ளது. அது அவர்களால் நிறைந்துள்ளது. ஆகாப் நானூறு தீர்க்கதரிசிகளைக் கொண்டு வந்து நிறுத்தினான். இவர்கள் தேவனை நம்பாதவர்கள் அல்ல. அவர்கள் யேகோவா தேவனை வழிப்படுபவர்கள். அவர்கள் அங்கு அடைந்து. ''எங்களுக்கு சிறிது அவகாசம் கொடுத்தால் நாங்கள் தீர்க்கதரிசனம் உரைப்போம்'' என்றனர். அவர்கள் எல்லோரும் ஒன்று கூடி கலந்தாலோசித்து. “கர்த்தருடைய வார்த்தையுடன் திரும்பி வருகின்றனர். அவர்கள், அதாவது இஸ்ரவேல் தீர்க்கதரிசிகள், கர்த்தர் உரைக்கிறதாவது, நீங்கள் போங்கள். கர்த்தர் உங்களோடிருக்கிறார். நீங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தைக் கைப்பற்றுவீர்கள். ஏனெனில், அது உண்மையில் இஸ்ரவேலருக்கு சொந்தம்'' என்றனர். அவர்களுடைய தலைவன் தனக்கு இரண்டு பெரிய இரும்புக் கொம்புகளை உண்டாக்கி ஜனங்களைத் தள்ளி, இவைகளால் நீர் இஸ்ரவேலரை... அல்ல, சீரியரை கீலேயாத்திலுள்ள ராமோத்திலிருந்து வெளியே தள்ளிவிடுவீர்'' என்றான். 26ஆனால் யோசபாத்துக்குள் இருந்த ஏதோ ஒன்று! ஓ, தேவன் இதை உங்கள் இருதயத்தில் பதியச் செய்வாரென நம்புகிறேன். இதை நீங்கள் கற்றறிய முடியாது, இதை நீங்கள் படித்து அறிந்து கொள்ள முடியாது. ''இது தேவன் தம்முடைய தெரிந்து கொள்ளுதலினால் உங்களுக்கு செய்வதாகும். ஒடுகிறவனாலும் அல்ல... இரங்குகிற தேவனாலேயாம்.'' யோசபாத், அவர்கள் நன்கு உடுத்தியுள்ள மனிதர் என்றான். அவன், அவர்கள் புத்திசாலிகள், நான் கேட்டதிலேயே அவர்கள் மிகவும் அறிவில் சிறந்தவர்கள். அவர்கள் இந்த காலத்தின் கல்வியைக் கற்றுள்ளனர். அவர்கள் ஒருமனதாயுள்ளனர். அவர்களிடையே பலத்த ஒற்றுமை உள்ளது. அவர்கள் அறிவாளிகள். அவர்களிடம் நிறைய உண்மை உள்ளது என்று அப்படி ஏதாவதொன்றைக் கூறியிருப்பான் என்பதில் சந்தேகமில்லை. எல்லா தவறுகளிலும் உண்மை அடங்கியுள்ளது. இதுவரை கூறப்பட்ட மிகப் பெரிய பொய்யில் - சாத்தான் ஏவாளிடம் கூறின பொய்யில் - தொண்ணூறு - (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி) சதவிகிதம் உண்மை. அடங்கியுள்ளது. 27ஓ, அவர்கள் கூறினதில் நிறைய உண்மை இருந்தது. இருப்பினும், வேறே யாராகிலும் இல்லையா? ஆகாப் என்ன சொல்லியிருப்பான் என்று நினைக்கிறீர்கள்? “இங்கு நமக்கு அறிவில் மிகச்சிறந்த நானூறு பேர் உள்ளனரே. அவர்கள் ஆட்டுத் தோலினால் தங்களைச் சுற்றிக் கொண்டு, வனாந்தரத்தில் அரை நிர்வாணமாய் நடப்பவர் அல்ல. இவர்களை நான் போஷித்து படிக்க வைத்திருக்கிறேன். மொழியின் முதலெழுத்துகளும் கூட அறியாதவர்கள் இவர்கள் அல்ல. இவர்கள் மேதைகள், எல்லாவற்றையும் அறிந்தவர்கள். இவர்கள் இரவும், பகலும் சுருள்களைப் படித்து அதிலுள்ள தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்தவர்கள். எது சரியென்று அவர்களுக்குத் தெரியும். அவர்களை நான் ஆயத்தப்படுத்தியிருக்கிறேன். அந்த நானூறு பேர்களும் ஒரு மனதுடன், ''நீங்கள் போங்கள், கர்த்தர் உங்களுடன் இருக்கிறார் என்று சொல்கின்றனரே'' என்று கூறியிருப்பான். 28என்னால் யோசபாத்தின் சிந்தையிலுள்ளதை சில நிமிடங்கள் ஆராய முடியுமானால், அது என் மனதில் பதியவில்லையோ என்று சொல்லியிருப்பான். ஏதோ சரியில்லை என்பது போல் தோன்றுகிறது. தீர்க்கதரிசி வேறே யாராகிலும் எங்காகிலும் இல்லையா?“ ஆகாப், ஒ ஆமாம். இன்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால் அவன் நம்முடைய ஸ்தாபனத்தை சேர்ந்தவன் அல்ல. அவன் வித்தியாசமானவன். அவன் எங்களை விட்டு ஓடிப்போனவன். அவன் யாக்கோபைப் போல் ஒருவன். வேண்டுமானால் அவனைக் கேட்டுப் பார்க்கலாம். அவன் தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் எனக்கு சந்தேகம் தான். ஏனெனில் அவன் இதை, அதை,மற்றதை சொல்லி என்னை எப்பொழுதும் சபித்துக் கொண்டிருக்கிறான். அவன் என்னைக் குறித்து நன்மையான எதையும் தீர்க்கதரிசனம் உரைப்பதில்லை என்றான். அவனால் எப்படி செய்ய முடியும்? பாருங்கள்? எனவே அவர்கள், ''நாங்கள் போய் அவனை அழைத்து வருகிறோம். அவன் இம்லாவின் குமாரன் என்றனர்.'' அவர்கள் போய் அவனை அழைத்து வந்தனர். 29யாரோ ஒருவர் அவனை வழியில் சந்தித்து, அவர்கள் உரைத்ததையே நீயும் உரைக்க வேண்டும். ''நீ சங்கத்துடன் இணங்க வேண்டும். இல்லையென்றால் உனக்கு ஐயோ!“ என்றான். அவன், ”கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்வேனே தவிர வேறொன்றையும் சொல்லமாட்டேன்“ என்று கூறிவிட்டான். அவன் அங்கு அடைந்த பிறகு ஒரு இரவு அவகாசம் கொடுத்தார்கள். அவன், “நீங்கள் போங்கள், ஆனால் இஸ்ரவேலரெல்லாம் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல் சிதறப்பட்டதைக் கண்டேன்” என்றான். ஆகாப், “நான் உம்மோடே சொல்லவில்லையா?” என்றான். இப்பொழுது, நானூறு பேர்களுக்கு எதிராக ஒருவன். பயிற்சி பெற்று, அறிவாற்றல் மிக்க, கல்வியறிவு பெற்ற நானூறு பேர்களுக்கு எதிராக, அறிவில்லாதவன் (Ignoramus) என்று அழைக்கிறோமே, அப்படிப்பட்ட ஒருவனாகிய மிகாயா. ஒரே மனிதன். ஆயினும் அந்த ஒரு மனிதன் கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டிருந்தான், அது வித்தியாசத்தை உண்டாக்கினது. நானூறு பேர்களில் ஒவ்வொருவரும் தவறென்று நிரூபிக்கப்பட்டனர். மிகாயா ஏன் வித்தியாசமானவனாயிருந்தான்? அவன் வித்தியாசமாயிருப்பதற்கென, ஏழையாக இருக்க வேண்டுமா? இல்லை... மிகாயாவை வித்தியாசமாகச் செய்தது என்னவெனில், அவன் வார்த்தையில் நிலை நின்றான். அவன் நிலை நின்றது தேவனுடைய வார்த்தையே. 30இந்த நாட்களில் தேவன் தம்முடைய ஆவியை ஊற்றுவார் என்று வாக்களிக்கப்பட்டுள்ளது. “சிலையின் பாதத்தில் கல் மோதும் நாட்களிலுள்ள ஜனங்கள், தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் பிரசித்தி பெற்ற செயல்களைச் செய்வார்கள்'' என்று தானியேல் வாக்களித்துள்ளான் (தானி.11:32.) ஆங்கிலத்தில் ”shall do exploits“ - அதாவது பிரசித்தி பெற்ற செயல்களைச் செய்வார்கள் என்று அர்த்தம். (ஆனால் தமிழ் வேதாகமத்தில் அதற்கேற்றபடி செய்வார்கள் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). தீர்க்கதரிசனத்துக்கு மேல் தீர்க்கதரிசனம்! உலகிலுள்ள வேத சாஸ்திர பள்ளிகள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் எப்படியும் தேவன் அதை செய்வார். ஜனங்கள் அதை பின்பற்றுவார்கள். பாருங்கள்? மாமிசப் பிரகாரமான சபையும், ஆவிக்குரிய சபையும். வார்த்தை தான் இவ்விரண்டிற்கும் வித்தியாசம் உண்டாக்குகிறது. யாக்கோபு, “என்ன நடந்தாலும் பரவாயில்லை. நான் சேஷ்டபுத்திரபாகத்தை பெறும் வரைக்கும் ஆசீர்வாதத்தை பெற முடியாது. ஆகவே, நான் எப்படியாகிலும் சேஷ்டபுத்திரபாகத்தை பெற்றே தீர வேண்டும்” என்று எண்ணினான். ஏசாவோ அதை வெறுத்தான். அவனுடைய பிள்ளைகளும் இன்று வரைக்கும் அதையே செய்கின்றனர். அவர்கள் அதை வெறுக்கின்றனர். அது எக்காலத்தும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. 31ஒரு எழுப்புதல் உண்டாகும் போதெல்லாம், அது இரட்டை பிள்ளைகளை தோன்றச் செய்கின்றது. அது கடினமான சொல், ஆனால் அது உண்மை. ஈசாக்குக்கும், ரெபேக்காளுக்கும் இரட்டையர் பிறந்தனர். உலகம் சிருஷ்டிக்கப்பட்ட போது, அது இரட்டை மரங்களை தோன்றச் செய்தது. காயீனும், ஆபேலும் இரட்டையர்களாக பிறந்தனர். இஸ்மவேலும், ஈசாக்கும் பிறந்த போது, அது இருவரை தோன்றச் செயதது. ஏசாவும், யாக்கோபும் இரட்டையர்களாகப் பிறந்தனர். ஒருவன் இயற்கையானவன் (பூமிக்குரியவன்), மற்றவன் இயற்கைக்கு மேட்டவன். ஒருவன் மாம்ச சிந்தை அறிவுத்திறனை நோக்கினான், மற்றவன் ஆவியில் நடந்தான். அது எக்காலத்தும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. லூத்தரன் சபை தோன்றின போது. . . . 32பெந்தெகொஸ்தே சபையை நாம் முதலில் எடுத்துக் கொள்வோம். பெந்தெகொஸ்தே சபை தோன்றின போது. அது மகத்தான, வல்லமையுள்ள எழுப்புதலை உண்டாக்கி, அது அக்காலத்திலிருந்த உலகம் முழுவதும் பரவினது. ஆனால் பெந்தெகொஸ்தே தொடங்கின சில நாட்களுக்குப் பிறகு பவுல், “உங்களில் சிலர் எழும்பி, ஜனங்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள்” என்றான் (அப்.20:30). அவர்கள் அவன் உரைத்தபடியே செய்தார்கள். அது இருவகைகளைத் தோன்றச் செய்தது. லூத்தரன் சபை தோன்றின போது, மார்டின் லூத்தர் ஆவிக்குரிய எழுப்புதலைக் கொண்டு வந்தார். ஆனால் சிறிது காலத்திற்குள் ஏசா அவர் பின்னால் வந்து ஸ்தாபனம் உண்டாக்கினான். அது இருவகைகளை தோன்றச் செய்தது. அதன் பிறகு மெதோடிஸ்டு சபை எழும்பினது. ஜான் வெஸ்லி ஆவிக்குரிய எழுப்புதலைக் கொண்டு வந்தார். ஆனால், சிறிது காலத்திற்குள் அதில் ஸ்தாபனம் தோன்றினது. அது இருவகைகளை தோன்றச் செய்தது. அதன் பிறகு பெந்தெகொஸ்தே, எழுப்புதல். இப்பொழுது அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, ஸ்தாபனமாகி விட்டனர். அது இருவகைகளை தோன்றச் செய்துள்ளது. 33ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய ஆவிக்குரிய சந்ததி பரதேசியாய் திரிந்து கொண்டிருக்கிறது! அது எப்பொழுதுமே பிரிவினையை உண்டாக்குகிறது. ஏசா, யாக்கோபுடன் நீண்ட காலம் நீடிக்கவில்லை. யாக்கோபு சேஷ்டபுத்திரபாகத்தைப் பெற்றுக் கொண்டவுடனே (தேவனுக்கு ஸ்தோத்திரம்) அது பிரிந்து போகும்படி செய்தது. ஒரு மனிதன்... நீ எந்த சபையைச் சேர்ந்திருந்தாலும் எனக்கு கவலையில்லை. அது மாம்சப்பிரகாரமாயிருந்து, உன் கூட்டாளியுடன் நீ சீட்டு விளையாடி, இலக்கிய சங்கங்களில் நீ பங்கு கொண்டிருப்பாயானால், நீ சேஷ்டபுத்திரபாகத்தைப் பெற்றுக் கொண்டவுடனே உன் இருதயத்திலுள்ள ஏதோ ஒன்று தேவனுக்காக பசி கொள்ளத் தொடங்கி, உன்னிடம் பிரிந்து போகக் கூறும். ''அவர்களுடைய நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.“ (2.கொரி;6:17). பிரிந்து போதல்! 34சபையானது அங்கே தங்கிவிடுகிறது. பாருங்கள், அதனால் முன்னேற முடியாது. ஏசா இன்றைய மாம்சப்பிரகாரமான விசுவாசிக்கும், உலகத்தை ஜெயங்கொள்ள முடியாதவனுக்கு, ஒரு நல்ல உதாரணமாகத் திகழ்கிறான். அவனால், உலகத்தின் காரியங்களை ஜெயங்கொள்ள முடிவதில்லை. அவர்கள் இப்பொழுதும் களியாட்டம், நடனம், பெண்கள் கைகளிலும், முகங்களிலும் வர்ணம் தீட்டிக் கொள்ளுதல், தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளுதல், குட்டை கால் சட்டை அணிதல் போன்றவைகளை விரும்புகின்றனர். ஆண்கள் நீச்சல் குளத்துக்கு சென்று, புகை பிடித்து, ஆபாசமான நகைச்சுவை துணுக்குகளை கூறி, அதே சமயத்தில் சபையை சேர்ந்துள்ளனர். அவர்களால் இவைகளையெல்லாம் ஜெயங்கொள்ள முடியாது. ஏசாவாலும் அப்படி செய்ய முடியவில்லை. ஆயினும் பக்தியுள்ளவனாயிருக்க, அறிவுத் திறனால் விளைந்த கருத்தை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இன்றைக்கு சபை அதை தான் செய்கிறது. “நாம் ஒரு ஸ்தாபனமாகி விடுவோம். நாம் ஒன்றாக இணைந்து ஒரு சிறு கும்பலாக, குடும்பமாக ஆகிவிடுவோம்'' என்கின்றனர், அப்படி ஏதாவதொன்று. இன்றைக்கும் மாம்சப்பிரகாரமான சபையும், ஆவிக்குரிய சபையும் இணையாக சென்று கொண்டிருக்கிறது. அதில் எவ்வித மாறுதலும் இல்லை. அது ஒருபோதும் மாறாது. 35தேவனுடைய பரிசுத்தம். தேவன் தேவனாயிருப்பதனால், தம்மை பரிசுத்தமுள்ளவராகக் காண்பிக்கிறார். பாவி இல்லாமல் போயிருந்தால், அவர் ஒரு போதும்... இரட்சகராக இருந்திருக்க முடியாது. அவர் ஆதியிலேயே இரட்சகராக இருந்த காரணத்தால், ஒன்றுமே இழக்கப்படவில்லை. இரட்சகர் என்னும் அவருடைய தன்மை, ஒரு பாவியை தோன்றச் செய்தது. ஏனெனில் இரட்சிக்கப்பட ஏதாவதொன்றிருந்தாக வேண்டும். அவருடைய நீதியும் பரிசுத்தமும்!வியாதியுள்ள ஒருவன் இல்லாமல் போயிருந்தால், அவர் சுகமளிப்பவராக இருந்திருக்க முடியாது. ஆனால், அவர் ஆதிமுதற் கொண்டே அல்லது, அதற்கும் முன்பே சுகமளிப்பவராக இருந்த காரணத்தால், ஒன்றும் வியாதியாயிருக்கவில்லை. ஆனால் அவரை சுகமளிப்பவராக காண்பிப்பதற்கு, வியாதியாயுள்ள ஒருவன் தோன்றி அவர் அவனை சுகப்படுத்த வேண்டியதாயிருந்தது. 36இரட்சிப்பு தோன்றின அதே பரிசுத்த ஆதிக்கத்திலிருந்து சாபங்களும் புறப்பட்டன. யாக்கோபு தோன்றின அதே பெற்றோரின் மூலம் ஏசாவும் தோன்றினான். பாருங்கள், அது தேவன். அவர் தமது திட்டங்களை மாற்ற முடியாது. அவை அப்படியே நடந்து கொண்டிருக்க வேண்டும். இயற்கை அனைத்தும் அதனுடன் பொருந்த வேண்டும். அது பொருந்தியே ஆக வேண்டும். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அதற்குள் நுழைந்து விடுகிறது. இரட்சிக்கப்படுவதற்கென யாராவது ஒருவர் இழக்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல் போயிருந்தால், அவர். அவருடைய இரட்சகரின் தன்மை அப்படி செய்தது. ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறது. பென்சில் ரப்பரையும், சைக்கிள் கால் மிதியிலுள்ள ரப்பரையும் தின்னும் சிறுவனைக் குறித்து நான் அடிக்கடி கூறியிருக்கிறேன். அவனுக்கு கந்தகம் தேவைப்பட்டது. அவனுடைய உடல் கந்தகத்துக்காக ஆவல் கொண்டு துடிக்கும் போது, வேறெங்காகிலும் கந்தகம் இருந்தாக வேண்டும். அவனுக்கு அந்த ஆவல் உண்டாவதற்கு முன்பே கந்தகம் இருக்க வேண்டும். கந்தகம் ஏற்கனவே இருந்ததன் விளைவாக அவன் கந்தகத்துக்காக துடித்தான். எனவே, அவன் கந்தகத்தை தின்றான். 37அதே விதமாகத் தான் தேவன் இரட்சகராக இருக்கிறார். அவர் இரட்சித்து இரட்சகரின் தன்மையை வெளிப்படுத்த யாராவது ஒருவர் இழக்கப்பட வேண்டும். அதெல்லாம் அவருடைய செயலே - தேவனுடைய தன்மைகளை வெளிப்படுத்த. எல்லாமே அவரைப் பொறுத்தது (ஒரு போதகரையோ, ஒரு சபையையோ, ஒரு ஸ்தாபனத்தையோ அல்ல, தேவனை). தெரிந்து கொள்ளப்படுதல் பரிபூரணமாய் நிற்க வேண்டும் என்பதற்காக, பாருங்கள். அது அவரைப் பொறுத்தது. ஆம், லுத்தரன்கள். . . . 38பிறகு நாம் மற்றொரு பிரிந்து செல்லுதலைக் காண்கிறோம். அது ஆபிரகாமும், லோத்தும். அவர்கள் சகோதரர். ஆனால் லோத்து மாம்சப்பிரகாரமாக சிந்திப்பான். அவன் எப்பொழுதுமே பெரிய காரியங்களை, பளிங்கை தேடினான் - ஒரு குரங்கு பிரகாசமானவைகளை தேடிச் செல்லும் என்று நான் அடிக்கடி கூறுவது போல். அந்த ஆவி இன்றும் ஜனங்களை விட்டுப் போகவில்லை. அவர்கள் தேடிச் செல்வது... அவர்கள் நகரத்துக்கு செல்கின்றனர், இப்படிப்பட்ட ஒரு சிறு இடத்துக்கு அவர்கள் வர மாட்டார்கள். பாருங்கள்? நகரத்திலுள்ள மிகப் பெரிய சபை, அறிவில் சிறந்த போதகர் அவர்களுக்கு தேவை. சிறந்த உடை உடுத்த, “ஜனங்கள் போகும் சபை, நகராண்மை தலைவர் போகும் சபை அவர்களுக்குத் தேவை. அது இன்னமும் அந்த ஏசாவின் ஆவி!'' தொடக்கத்தில் சேஷ்டபுத்திரபாகம் இருந்தது! அவர்கள் தங்களை சபை என்று அழைத்துக் கொண்டனர், ஆனால் அவர்கள் அதை இகழ்ந்த காரணத்தால் இழந்துவிட்டனர். அப்படிப்பட்ட ஜனங்களை முழங்கால்படியிடச் செய்து, தேவனிடம் அழுது கெஞ்சி, வெளியே சென்று சுகமளிக்கும் ஆராதனை நடத்த, உலகத்தின் துன்புறுத்தலை சகித்து, பரிசுத்த ஆவியை பெறச் செய்ய உங்களால் முடியாது. அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். அவர்கள் அதை இகழ்வார்கள். அவர்கள் அதை, ”உருளும் பரிசுத்தரின் கூட்டம்'' என்றழைப்பார்கள். அவர்கள் என்ன செய்வார்களென்று வேதம் உரைக்கிறதோ, அதையே செய்வார்கள். அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்றால், அது அவர்களுடைய சுபாவம். காக்கைக்கும், புறாவுக்கும் வெவ்வேறு சுபாவங்கள் உள்ளது போல். அவர்களுக்கு அந்த சுபாவம் உள்ள காரணத்தால், அவர்கள் அதை வாஞ்சிக்கின்றனர். அவர்களால் மற்றதை காணமுடியாது (ஒரு போதும்), ஏனெனில் அதை காண்பதற்கென அவர்கள் பிறக்கவில்லை. 39அது போல், மற்றவனையும் அங்கு செல்லாமலிருக்க நீங்கள் தடை செய்ய முடியாது. ஏனெனில், அது தேவனுடைய தெரிந்து கொள்ளுதல். அவர்கள் ஆவிக்குரிய மனிதனாக அல்லது ஆவிக்குரிய ஸ்திரீயாக இருக்க பிறந்திருக்கின்றனர். அவர்களுக்குள்ள ஏதோ ஒன்று அதை நோக்கிக் கூப்பிடுகிறது. ஓ, நான் என்ன கூறுகிறேன் என்பதை புரிந்து கொள்ளும் நிலையை அடைந்துவிட்டீர்கள் என்று நம்புகிறேன். இப்பொழுது ஆபிரகாம்... ஞாபகம் கொள்ளுங்கள், மாமிசப்பிரகாரமான சபையும், ஆவிக்குரிய சபையும் ஒன்றாயிருந்த வரைக்கும், ஆவிக்குரிய சபை ஆசீர்வாதத்தை பெறவில்லை. யாக்கோபு, ஏசாவிடமிருந்து பிரிந்து போகும் வரைக்கும் ஆசீர்வதிக்கப்படவில்லை. அவ்வாறே ஆபிரகாமும் லோத்தினிடமிருந்து பிரிந்து போகும் வரைக்கும் ஆசீர்வதிக்கப்படவில்லை. 40லோத்து தன் சபையில் தன் சொந்த ஜெபக் கூட்டங்களை நடத்தி, தன் குமாரத்திகளுக்கும், மற்றவர்களுக்கும் போதித்து வந்தான். ஆனால், அவன் அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வந்த காரணத்தால், அவன் காலத்தின் முடிவைக் குறித்து அவர்களிடம் கூறினபோது, அவர்கள் அவனைப் பார்த்து சிரித்தனர். இன்றைக்கும் அதுதான் நடக்கிறது! நீங்கள் தெய்வீக சுகமளித்தலைக் குறித்தும், தேவனுடைய வல்லமையையும் குறித்து பேசினால், அவர்கள் அதைக் கேட்டு சிரிக்கின்றனர். அதுதான் இந்த உலகத்தை இறுகப்பற்றிக் கொண்டிருக்கும், மத சம்பந்தமான இரண்டு பெரிய ஆவிகள் - விசுவாசியும் பாவனை விசுவாசியும். ஒருவன் மற்றவனை பாவனை செய்கிறான். ஆபிரகாம் தன்னை வேறு பிரித்துக் கொண்ட போது... 41நீங்கள் கவனித்தீர்களா? இயேசு தமது இரண்டாம் வருகையை குறிப்பிடும்போது அவர், ''நோவாவின் காலத்தில் அவர்கள் புசித்தும், குடித்தும் பெண் கொண்டும் பெண் கொடுத்தும் இருந்தார்கள்'' என்று கூறினார். ஆனால், லோத்தின் நாட்களைக் குறிப்பிடும் போது அவர் ஒன்றுமே கூறவில்லை. அவர், லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் நடக்கும் என்று கூறி விட்டுவிட்டார். அது வெளிப்பாட்டிற்காக. லோத்தின் நாட்களில் என்ன நடந்ததென்று கவனியுங்கள். சோதோமில் லோத்து குடிபுகுந்து அங்கே தங்கினான். அவன் அறிவாளியாய் நகரத்தின் பெரிய மனிதர்களில் ஒருவனாக, நீதிபதியாக, பட்டினத்து வாசல்களில் உட்கார்ந்து கொண்டு ஜனங்களை நியாயம் விசாரித்தான். அவனுடைய மனைவியும், குமாரத்திகளும் பட்டினத்திலிருந்த எல்லா சங்கங்களிலும் அங்கத்தினராயிருந்தனர். அவர்கள் உயர்ந்த நிலையிருந்த கல்வியறிவு பெற்ற அறிவாளிகளுடன், நகைச்சுவையோடு பேசுபவருடன் தொடர்பு கொண்டிருந்தனர். ஆபிரகாமோ ஒரு கர்வாலி மரத்தின் கீழிருந்த கூடாரத்தில் குடியிருந்தான். ஆனால், ஒரு நாள் இருவருக்குமே ஒரு சந்திப்பு உண்டானது. 42அறிவு நிறைந்த போதகர் ஒருவர் சோதோமுக்கு சென்று பிரசங்கித்து அவர்களை வெளியே அழைத்தார். அந்த செய்தியைப் பாருங்கள். அவர் லோத்தினிடம், வெளியே வா என்றார். ஆபிரகாம் இரக்கத்துக்காக மன்றாடாமல் போயிருந்தால், லோத்து வெளியே அழைக்கப்பட்டிருக்கவே மாட்டான். ஆபிரகாம் ஐம்பது நீதிமான்கள் இருந்தால் சோதோமை அழிக்காமலிருப்பீரோ? என்றான். முப்பது நீதிமான்கள் இருந்தால்? ஒருவேளை பத்து நீதிமான்கள் இருந்தால்? அதுவரைக்கும் தான் அவனால் செல்ல முடிந்தது. அவனால் பத்து நீதிமான்களையும் கூட அங்கு காணமுடியவில்லை. ''நோவாவின் காலத்தில்'' என்று அவர் கூறினதில் வியப்பொன்றுமில்லை. நோவா சபைக்கு முன்னடையாளமல்ல என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். உபத்திரவத்துக்குள் கடந்து செல்லாத ஏனோக்கு தான் சபைக்கு முன்னடையாளமாயிருந்தான். உபத்திரவம் வருவதற்கு முன்பே அவன் எடுக்கப்பட்டான். அவன் வீடு சென்றான். அவன் உபத்திரவத்துக்குள் பிரவேசிக்கவில்லை. நோவா உபத்திரவத்தைக் கடந்து சென்றான். 43இதைக் குறித்து பேசும் போது கூர்ந்து கவனியுங்கள். ஆபிரகாமுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் எந்தவிதமான அடையாளம் கொடுக்கப்பட்டதென்று கவனியுங்கள். இயற்கைக்கு மேம்பட்ட அடையாளத்தை அவர்கள் பெற்றனர். ஆபிரகாமே! அவன் பெயர் ஆபிரகாம் என்று அவருக்கு எப்படி தெரியும்? “உன் மனைவி சாராள் எங்கே?'' அவன் விவாகமானவன் என்றும், அவனுக்கு சாராள் என்னும் பெயர் கொண்ட மனைவி இருக்கிறாள் என்றும் அவருக்கு எப்படி தெரியும்? அவள் கூடாரத்தில் இருக்கிறாள். ஒரு மனிதன் அங்கு உட்கார்ந்து கொண்டு, இறைச்சி புசித்து பால் குடித்து, சோள ரொட்டியை தின்று, “உன் மனைவி சாராள் எங்கே?” என்று கேட்கிறார். அது எப்படி அவருக்குத் தெரியும்? யோசித்துப் பாருங்கள்... ஆவிக்குரிய ஜனங்களே, இது உங்களில் பதியட்டும். அவர் ஒரு அந்நியராக, உடையில் தூசி படிந்தவராய் இருக்க, அவருக்கு எப்படி இதுதெரியும்? ஆபிரகாம், அவள் உமக்கு பின்புறமாய் உள்ள கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். அவர், ''நான் வருவேன்...'' என்கிறார். “நான்” என்னும் தனிப்பிரதிப் பெயர். “நான்”, இந்த மனிதன், தேவன் தம்மை மாமிசத்தில் வெளிப்படுத்துதல். தேவன்! ஆபிரகாம் அவரை ஏலோகிம் என்றழைத்தான். நான், நான் உன்னிடத்தில் திரும்ப வருவேன். என் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றப் போகிறேன். உற்பவ காலத்திட்டத்தில் நான் திரும்ப உன்னிடத்தில் வருவேன். நான் உனக்கு வாக்களித்தபடியே, ஒரு குமாரன் பிறப்பான்“ என்றார். ஆபிரகாமுக்கு நூறு வயது, சாராளுக்கு தொண்ணூறு வயது. 44சாராள் கூடாரத்தில் (நான்கு சிறிய கூடாரங்களில் முதன்மையான கூடாரத்தில்) கூடாரத்துணிக்குப் பின்னால் இருந்து இதை கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் உள்ளத்தில் நகைத்து, “நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ள வருமான பின்பு, இளைஞர்களைப் போல் எங்களுக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்று யோசித்து பாருங்கள். அது எப்படி முடியும்? என்று நினைத்து ஒருவிதமாக நகைத்தாள். அவருடைய முதுகு கூடாரப் பக்கம் திரும்பியிருந்தது. அவர், “சாராள் ஏன் நகைத்தாள்?'' என்று கேட்டார். ஓ, சகோதரனே, பார்த்தாயா! 45மாம்சப்பிரகாரமான சபைக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதை பாருங்கள். நவீன பில்லிகிரகாமும், மற்றவர்களும் அங்கு சுவிசேஷத்தை பிரசங்கித்து, ''வெளியே வா“ என்கின்றனர். அவர்கள் வந்தார்களா? இல்லை. மிக, மிக, மிக சொற்பப்பேர்கள். வெளியே அழைக்கப்பட்ட ஆபிரகாமின் கூட்டத்தைப் பாருங்கள். இப்பொழுது கவனியுங்கள். அவர் ஆபிரகாமுக்கு இந்த அடையாளத்தைக் கொடுத்தார். அவன் அதை விசுவாசித்தான். அவர் அவனுக்கு முன்பாக மறைந்து போய் அங்கிருந்து போய்விட்டார். ஒ, அது எப்பொழுதுமே பிரிந்து போதல், வெளியே அழைக்கப்படுதல். 46இப்பொழுது. இந்த இரு ஆவிகளும் (நீங்கள் எதை காண வேண்டுமென்று விரும்புகிறேனோ, அந்த இடத்தை நான் வேகமாக அடைய வேண்டும்), காலத்தின் துவக்கம் முதற்கொண்டு இந்த இரு குழுக்களும் - அதாவது மாம்சப்பிரகாரமான சபையும், ஆவிக்குரிய சபையும் - நெருங்கி இணைந்து வந்துள்ளன. அவை பழைய ஏற்பாட்டின் காலத்தில் அவ்வாறு இருந்து, புதிய ஏற்பாட்டின் காலத்திலும் அவ்வாறு இருந்து, இன்றைக்கும் அவ்வாறு இருந்து வருகின்றன. 47சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அது தலைமையடைந்து, இரண்டு மனிதர்களில் தலைமை பெற்றது. ஒருவர் இயேசு கிறிஸ்து, மற்றவன் யூதாஸ்காரியோத்து. இயேசு தம்முடைய இரண்டாம் வருகையுடன் சம்பந்தப்படுத்தி, இந்த இரண்டு ஆவிகளும் முன்பிருந்ததை விட அதிக வித்தியாசமாயிருக்கும் என்றார். இங்கு தான் நீங்கள் உங்கள் மகிமையின் வஸ்திரங்களை தரித்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த இரண்டு ஆவிகளும் வித்தியாசமாயிருக்கப் போகின்றன. ஏனெனில், சாத்தான் வந்து யூதாஸ்காரியோத்து என்னும் சபை அங்கத்தினரில் வாசம் செய்து, இப்படியாக மாம்சப்பிரகாரமான சபையில் வாசம் செய்து, அந்த சபைக்கு எப்பொழுதுமே நண்பனாக இருந்து வந்துள்ளான். யூதாஸ்காரியோத்து வந்து தன் சகோதரனை ஏமாற்றினான், ஏமாற்றினதாக எண்ணினான். அவன் அவர்களில் ஒருவனாக தன்னைப் பாவித்து, தேவனுடைய நல்ல காரியங்களை ருசி பார்த்து, ஆவியில் நடந்து கொண்டது போல் காணப்பட்டு, வெளியே சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிசாசுகளைத் துரத்தினான். ஆனால் எல்லா நேரத்திலும் அவன் தனக்குள் யூதாஸாகவே தொடக்கத்திலிருந்து இருந்தான். அவன் கேட்டின் மகனாகப் பிறந்ததாக வேதம் கூறுகிறது. 48ஞாபகம் கொள்ளுங்கள், அங்கு ஏசாவின் தலைமையில் - அதாவது பரிசேயர்கள் சதுசேயர்கள் தலைமையில் மாம்சப்பிரகாரமான சபை இருந்தது. இந்த ஆளைக் கவனியுங்கள், அவன் தன்னை என்ன நினைத்துக் கொள்கிறான் என்றால்.... அவன் சிறிது காலம் செய்தியைப் பின்பற்றுகிறான். ஆனால், அவன் அதில் அதிகமாக ஈடுபட விரும்புவதில்லை. அந்த ஆவிகளைப் பார்த்தீர்களா? அது உண்மையானதற்கு மிகவும் நெருங்கியிருந்து கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் - நீங்கள் கவனிப்பீர்களானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று இயேசு கூறினார். ஆனால் அது கூடாத காரியம்! பாருங்கள், அது வஞ்சிக்கும். இப்பொழுது கவனியுங்கள், அங்குள்ள ஏசாவின் குழுவாகிய வழக்கமான மாம்சப்பிரகாரமான சபையை அல்ல. இப்பொழுது நமக்கு யூதாஸின் குழு உள்ளது. அது ஏசாவின் குழுவைக் காட்டிலும் அதிக துரோகமும் வஞ்சகமுமுள்ளது. அது ஆசீர்வாதத்தை பெறும் கட்டம் வரைக்கும் அடைகிறது. எபிரேயர் 6 மற்றும் 10ம் அதிகாரங்களில் அவர், ''அவர்கள் ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், இனிவரும் உலகத்தின் பெலன்களை ருசி பார்த்தும், இவையெல்லாவற்றையும் செய்து, சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு அவர்கள் மனப்பூர்வமாய் பாவஞ் செய்து தங்களைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணுகிறார்கள்“ என்றார். 49உங்களுக்கு ஒரு உதாரணத்தை கூற விரும்புகிறேன். ஒரு மனிதன் இருக்கிறான், அவன் நல்லவன். அவன் அழைக்கப்படுகிறான். அவன் போதகராக வேண்டுமென்று அவனுடைய இருதயத்தில் ஒரு உணர்ச்சி உண்டாகிறது. சரி, அவன் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறான். அவன் நல்லவன், யாரும் அவனுக்கு விரோதமாக ஒன்றுமே சொல்ல முடியாது. சிறிது கழிந்து, பரிசுத்தமாக்கப்படுதல் என்னும் விஷயம் வருகிறது. அவன் பெண்களைக் காணும் போது இச்சிக்கிறான் - அவன் பாவம் செய்கிறான், பாருங்கள். அதன் பிறகு அடுத்தபடியாக, அவன் புகை பிடிக்கிறான் அல்லது அவனுக்கு புகை பிடிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அவனுக்கு சூதாட வேண்டுமென்று தோன்றுகிறது. சில தவறான காரியங்களை செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது. அவைகளை அவன் செய்யக் கூடாதென்று அவனுக்குத் தெரியும். எனவே அவன், “ஒ தேவனே, இயேசுவின் இரத்தத்தை என் மேல் தெளித்து என்னைப் பரிசுத்தமாக்கியருளும்” என்று வேண்டுதல் செய்கிறான். அவன் பரிசுத்தமாக்கப்படுகிறான். அவன் கூச்சலிட்டு, கர்த்தரை துதித்து, இப்படிப்பட்ட சில காரியங்களை செய்கிறான். ஞாபகம் கொள்ளுங்கள். இந்த வகையினர் அந்நாளில் இருப்பார்கள் என்று இயேசு கூறினார். அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தேன். (பிரசங்கம் செய்தேன்) அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினேன் அல்லவா? என்பார்கள் என்றார். இயேசுவோ, நான் ஒருக்காலும் உன்னை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரனே, என்னை விட்டு அகன்று போ, என்பார். பாருங்கள். அதோ அவர்கள். 50இதை இப்பொழுது கவனியுங்கள். நாம் இப்பொழுது தலைமயிர் பருமனைக் காட்டிலும் மிகக்குறைவான, சுவிசேஷத்தின் கருக்குள்ள இடத்துக்கு வந்திருக்கிறோம். ''இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், கணுக்களைப் பிரிக்கத்தக்கதாக உருவாக்குத்துகிறதாயும், வகையறுக்கிறதாயும், இருக்கிறது. அல்லேலூயா! தேவனே, இது பதியும்படி செய்யும். இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறது. அதுதான் சுவிசேஷம். தேவனுடைய வல்லமை. தேவனுடைய வார்த்தை வெளிப்படுவதே சுவிசேஷம்.'' நீங்கள், ''அது தேவனுடைய வார்த்தை என்று தானே வேதம் கூறுகிறது எனலாம்.'' நல்லது, வார்த்தை வெளிப்படுவதே சுவிசேஷம். சுவிசேஷம் நம்மிடத்தில் வார்த்தையின் மூலம் மாத்திரமல்ல, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் வந்து, சுவிசேஷத்தை உயர்ப்பித்தது. 51நான் இந்தியாவுக்குச் சென்றிருந்த போது, மெதோடிஸ்டு சபையின் தலைமை பேராயர் என்னிடம், ''திரு. பிரான்ஹாமே, ஒரு மிஷனரியைக் குறித்து நாங்கள் எதையும் அறிய விரும்பவில்லை. உங்கள் எல்லாரைக் காட்டிலும் எங்களுக்கு வேதாகமம் அதிகம் தெரியும். எங்கள் சபை, நீங்கள் ஒரு நாடாவதற்கு முன்பே, இரண்டாயிரம் ஆண்டு காலமாக நீடித்து வந்துள்ளது. ஆனால், தேவன் உம்மை சந்தித்து. இந்த வேதாகமத்தை உயிர்ப்பிக்க ஒரு வரத்தை உமக்கு அருளியுள்ளதாக நாங்கள் கேள்விப்பட்டோம். அதில் தான் நாங்கள் சிரத்தை கொண்டுள்ளோம்,'' என்றார். ஓ, என்னே! பாருங்கள், அந்த மனிதன் ஒரு குமாரன், பேரன் அல்ல - டேவிட் ட்யூப்ளெஸிஸ் கூறினது போன்று பாருங்கள்? ''நாங்கள் அறிய விரும்புகிறோம். அது உண்மையா?'' என்றார் அவர். நான், ''நிச்சயமாக அது உண்மை. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்றேன். 52இப்பொழுது, அவனைக் கவனியுங்கள். மாம்சப்பிரகாரமான சபை ஆவிக்குரிய சபையை துன்புறுத்துகிறது. யூதாஸ் ஒரு சகோதரனைப் போல் பாசாங்கு செய்து, முன்னேறிக் கொண்டே வந்து, முடிவில் உச்சக்கட்டத்தை அடைவதை நாம் காண்கிறோம். இந்த வாலிபப் போதகரை கவனியுங்கள். அவன் ஒரு நிலையை அடைந்து, ''கர்த்தாவே, நான் பெண்களை இச்சையோடு நோக்கினேன். அப்படி செய்திருக்கக் கூடாது. நான் உலகத்தின் காரியங்களை செய்து கொண்டு வந்தேன், அப்படி செய்திருக்கக் கூடாது. என் பணத்தை நான் குதிரைப் பந்தயத்தில் செலவழித்து வந்தேன், அப்படி செய்திருக்கக் கூடாது. ஒவ்வொரு இரவும் நான் திரைப்படங்களைக் காணச் சென்றேன், அப்படி செய்திருக்கக் கூடாது. ஆபாசமான படங்களை நான் பார்த்து ரசிக்கிறேன். என் அறையிலும் கூட அரை நிர்வாணப் பெண்களின் படங்கள் உள்ளன. அப்படி செய்திருக்கக் கூடாது. அவை உலகத்தின் காரியங்கள். கர்த்தாவே, என்னை பரிசுத்தமாக்கும்'' என்கிறான். கர்த்தர், ''சரி, நான் அப்படியே செய்கிறேன் என்று சொல்லி, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை தடவி அவனைப் பரிசுத்தமாக்குகிறார்.'' 53அதன்பிறகு அவன் ஒரு இரவு நடந்து சென்று கொண்டிருக்கும் போது, ஏதோ ஒன்றைக் கேட்கிறான். அவன் அங்கு சென்று உன்னிப்பாக கேட்கிறான். பரிசுத்த ஆவியின் அபிஷேகம், ஆவியினால் நிறைதல் போன்றவைகளை அவன் கேட்கிறான். அவன் அதைக் குறித்து வேதத்தை ஆராய்ந்து பார்த்து. ''ஒ, என்னே, அது அற்புதம் அல்லவா! ஆனால் அதை நான் பிரசங்கித்தால், அது என் ஊழியத்தை பாழாக்கிவிடும். என் தாயை அது வீட்டை விட்டுத் துரத்திவிடும். அதை நான் ஏற்றுக் கொண்டால், அவர்கள் என்னை சபையை விட்டுப் புறம்பாக்குவார்கள். ஓ, அதை ஏற்றுக்கொள்ளாமலிருப்பது நலம். எதற்கும் நான் வேதத்தை ஆராய்ந்து பார்க்கட்டும். ஆம், அதுதான் உண்மை என்கிறான். 54உலகப்பிரசத்தி பெற்ற ஒரு போதகர் இங்கிலாந்தில் முழங்கால் படியிட்டு அந்நிய பாஷைகள் பேசுவதை என்னுடன் கூட போர்டோ ரிக்கோவில் இருந்த ஒரு மனிதன் கண்டார். இந்த போதகர் செல்வாக்குள்ளவர், இன்று உலகிலுள்ள மிகப் பெரிய சுவிசேஷகர்களில் ஒருவர். என்னுடன் கூட இருந்தவர் அவருடைய சகோதரன், ஆவியின் நிறைவைப் பெற்றவர். அவர் இந்த போதகரிடம் ஓடிச் சென்று, “சகோதரனே, அதுதான். நீர் கண்டு கொண்டீர்'' என்றார். போதகர், ''அது எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும். ஆனால் பார், உன்னிடம் ஒன்றைக் கூற வேண்டும் என்றார். அவருடைய சகோதரன். ''இதை இப்பொழுதே பிரசங்கியுங்கள்! இதை பிரசங்கியுங்கள்! இதுவே அந்த நேரம். உங்களுக்கு இருக்கும். செல்வாக்கைக் கொண்டு, உலகத்தையே அசைத்து விட முடியும்'' என்றார். போதகரோ, ''இல்லை, என்னால் பிரசங்கிக்க முடியாது. பார். சபை என்னை புறம்பாக்கும். என்னால் பிரசங்கிக்க முடியாது. என்னால் முடியாது என்று சொல்லிவிட்டார்.'' ஓ, சகோதரனே! 55ஒருதரம் பரிசுத்தமாக்கப்பட்டு, சத்தியத்தை அறியும் அறிவை அடையும் வரை வந்து (அதை பாருங்கள், அது உண்மை), மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகின்றனர். அவர்கள் சுவிசேஷத்தை குறித்து வெட்கப்படுகின்றனர். பவுல், ''கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன். இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது'' என்றான். (ரோமர்.1:16). அது தமது சபையில் கிரியை செய்து கொண்டு வருகிற தேவனுடைய வல்லமை. ஆனால் அவரோ, ''என்னால் முடியாது என்று சொல்லிவிட்டார். அவர்கள் என்னை பெந்தெகொஸ்தேக்காரன் என்று நினைத்துக் கொள்வார்கள். அவர்கள் என்னை... ''என் நன்மதிப்பு பாழாகிவிடும்'' என்றார். ஓ, சகோதரனே! எனக்கு நன்மதிப்பு எதுவும் கிடையாது. அவருடைய நன்மதிப்பைக் குறித்து தான் நான் எப்பொழுதுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவர் ஒருவருடைய நன்மதிப்பையே. 56ஆனால் அவர்கள் அதற்கு எவ்வளவு அருகாமையில் வருகின்றனர் என்று பாருங்கள். தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி; அவனைப் பரிசுத்தஞ் செய்து உலகத்தினின்று அவனை எடுத்து, இங்கு கொண்டு நிறுத்தின அந்த இரத்தத்தை; அவன் அதை காண்கிறான். அதை அறியும் அறிவையும் அடைகிறான், அதை ஒருவன் மறுதலித்தால் பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியில்லை என்று வேதம் கூறுகிறது (எபி.10:26). ஆனால், “நியாயந்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். பழிவாங்குதல் எனக்குரியது என்று கர்த்தர் சொல்லுகிறார். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளினாலே சாகிறானே. அப்படியிருக்க சத்தியத்தை அறிகிற அறிவை அடைந்த பின்பு, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைக் காலின் கீழ் மிதித்து அதை அசுத்தமென்றெண்ணும் ஒரு போதகர் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பார் என்பதை யோசித்துப் பாருங்கள்” (எபி.10:26-30). வயூ! 57நாம் எங்கிருக்கிறோம் என்று பார்த்தீர்களா? இயேசு, ''ஜாக்கிரதையாயிருங்கள்'' என்றார். யூதாஸ் எப்படியிருந்தான் என்று பாருங்கள்! அவன் அவர்களுடன் கூடவே இருந்தான். அவன் இக்காலத்திற்கென மிகைப்படுத்தப்பட்ட ஏசா. அவன் வஞ்சிக்கிறவன், போலியாள். இந்த காலத்துக்கென மிகைப்படுத்தப்பட்டவன். அவன் இயேசுவின் சகோதரனைப் போல் பாசாங்கு செய்து அங்கு வருகிறான். ஆனால் அவனுடைய இருதயத்தில் அவன் எப்பொழுதுமே மாம்சப்பிரகாரமான சபையை சார்ந்திருந்தான். அவர்களிடம் தான் அவன் இயேசுவை விற்றுப்போட்டான். ஏசா ஒரு பானை கூழுக்காக தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப் போட்டது போல் யூதாஸம் தன் சேஷ்டபுத்திரபாகமாகிய இயேசுவை முப்பது வெள்ளிக்காசுக்கு விற்றுப் போட்டான். 58இன்று அநேக ஆண்களும், பெண்களும் தங்கள் ஆவிக்குரிய சேஷ்டபுத்திரபாகத்தை புகழுக்காகவும், அவர்களால் மேற்கொள்ள முடியாத சில சிறு காரியங்களுக்காகவும், அழகு சாதனங்கள் உபயோகிப்பதற்காகவும் (பெண்கள்), தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வதற்காகவும், குட்டை உடைகள் உடுப்பதற்காகவும், ஆண்கள் ஆபாச நகைச்சுவை துணுக்குகளைக் கூறி, புகைபிடித்து. உலகத்தின் சில காரியங்களைப் பெற வேண்டும் என்பதற்காகவும் விற்று போட்டு விட்டனர். ''நீங்கள் உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால் உங்களிடத்தில் தேவனின் அன்பில்லை'' என்று வேதம் கூறுகிறது (1.யோவான்;2:15) உங்களை நான் புண்படுத்த விரும்பவில்லை. ஆனால், நாம் முடிவுக்கு வந்திருக்கிறோம். நாம் ஏணிப்படிகளின் மேல் வேகமாக ஏறி மேலே வந்து கொண்டிருக்கிறோம். 59அது எப்படியிருக்கிறதென்று பாருங்கள்! அவர்கள் அதை செய்ய முன் குறிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாவனை செய்து கிறிஸ்தவர்களைப் போல் இனிமையாயும், தாழ்மையாயும் அவர்களுக்கு மிக அருகாமையில் இருந்து அது கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். ஆனால், அவர்களுடைய கனிகளினால் நீங்கள் அறிவீர்கள். குட்டைகால் சட்டை அணிந்திருக்கும் ஒருத்தி எனக்கு கிறிஸ்தவளாக காணப்படமாட்டாள். தலைமயிரைக் கத்தரிப்பது ஸ்திரீகளுக்கு பாவமும், அவமானமுமான செயலாகும் என்று வேதம் கூறுகிறது. வேதத்தில் ஒரே ஒரு பெண் மாத்திரமே தன் முகத்தில் வர்ணம் தீட்டிக் கொண்டாள் - யேசபேல். கிறிஸ்தவர்கள் என்று உங்களைக் கூறிக்கொண்டு, உங்கள் மனைவிகள் அப்படி செய்ய அனுமதிக்கும் ஆண்களாகிய உங்களைக் குறித்தென்ன? அதற்கு தேவன் உங்களை உத்தரவாதமுள்ளவர்களாக்குவார். உடனே மாம்சப்பிரகாரமான மனிதன். அப்படியானால் நான் போய் அந்த சபையை... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). அதை சற்று யோசித்துப் பாருங்கள். அப்படித்தான் அவர்கள் செய்வார்கள் என்று வேதம் கூறுகிறது. அப்படித்தான் அவர்களும் செய்து கொண்டு வருகின்றனர். அப்படித்தான் அவர்கள் செய்வார்கள், ஒப்புரவாதல்! ஒருவர் என்னிடம். பில்லி, அதை நீர் நிறுத்தாமல் போனால், எல்லோரையும் விரட்டி விடுவீர் என்றார். ஆனால், ஒன்று மாத்திரம் இங்கிருந்து போய் விடாது. அதுதான் பரிசுத்த ஆவி. ஏனெனில் அது அவருடைய வார்த்தை. உண்மையான முன் குறிக்கப்பட்ட விசுவாசி போய் விடமாட்டான், ஏனெனில் அது அவனுடைய ஆத்துமாவுக்கு ஆகாரமாயுள்ளது. அவன் அதை நேசிக்கிறான். எதுவுமே அவனை அதிலிருந்து தடுத்து நிறுத்த முடியாது. அவன் யாக்கோபைப் போல் எதையும் செய்வான். ஆனால், அவனுக்கு அந்த சேஷ்டபுத்திரபாகம் வேண்டும். அவன் அதில் நிலைநிற்பான். அதன் விளைவாக அவனுடைய நண்பர் அனைவரும் அவனை விட்டுச் சென்றாலும், அவனுடைய வேலை போய்விட்டாலும், சபை அங்கத்தின்னாயுள்ளதை இழக்க நேரிட்டாலும். எல்லாவற்றையும் இழந்தாலும், அவன் அப்பொழுதும் அதை செய்வான். ''ஏனெனில், அவனால் அதை செய்யாமலிருக்க முடியாது. அவனுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று அசைகிறது. ஆழம், ஆழத்தை நோக்கிக் கூப்பிடுகிறது.'' ஓ, பார்த்தீர்களா, அவனுக்குள்ள ஏதோ ஒன்று. 60பாருங்கள், நீங்கள் வேதத்தில் ஏதாவதொன்றைக் கண்டு அறிந்து கொள்ள விரும்பினால், ஆதியாகமத்துக்கு சென்று அது எங்கிருந்து தொடங்கினது என்பதைக் கண்டு கொள்ளுங்கள். இன்றுள்ள எல்லா ஆவிகளும், அசைவுகளும் ஆதியாகமத்தில் தொடக்கத்தைப் பெற்றுள்ளன. நண்பனே, நீங்கள் இப்பொழுது காண்பவைகளை உங்களுக்கு நிரூபிப்பதற்கென, அதை தான் நாங்கள் செய்தோம். அதை மறக்க வேண்டாம். அதை உங்கள் சிந்தையிலிருந்து நழுவவிட வேண்டாம். அது உங்களில் பதியட்டும். தேவனுடைய காரியங்கள் தலைமை கட்டத்துக்கு வந்தன. அது மறுபடியும் கடைசி நாட்களில் தலைமை கட்டத்துக்கு வருமென்றும், அது தேவனுடைய முத்திரை, மிருகத்தின் முத்திரை என்பவைகளைக் கொண்டு இரண்டு ஆவிக்குரிய வல்லமைகள் ஒன்றாக கிரியை செய்யுமென்றும் இயேசு முன்னுரைத்துள்ளார். 61தேவனுடைய முத்திரை என்பது சேஷ்டபுத்திரபாகம், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று எவருமே அறிவர். ''நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்'' என்று எபேசியர்.4:30 உரைக்கிறது. அவர்கள் மறுபடியும் பிறந்தபோது, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டனர். பரிசுத்த ஆவி என்பது மறுபிறப்பு, அதை நாமறிவோம். நீங்கள் ஆவியினால் பிறக்கிறீர்கள், அதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் பிறக்கும் வரைக்கும்! தாயின் கர்ப்பத்தில் உருவாகும் குழந்தைக்கு ஒருவிதமான ஜீவன் உள்ளது. அது பாருங்கள், ஜீவன் - அந்த குழந்தையின் உடலிலுள்ள சிறு அணுக்கள் இப்படி முறுக்கிக் கொண்டும், உதைத்துக் கொண்டும், குதித்துக் கொண்டும் உள்ளது. ஆனால் அது பிறக்கும் போது, அதற்கு இப்படி ஒரு (அதற்கு ஒரு அடி கொடுக்க வேண்டும் என்பதை காண்பிக்க சகோ. பிரான்ஹாம் தன் கைகளை தட்டுகிறார் - ஆசி). அப்பொழுது அது அழத் தொடங்கி, ஜீவாத்துமாவாகிறது. 62குழந்தை சபைக்கு சென்று, ''ஓ, நான் சபையில் விசுவாசம் கொண்டிருக்கிறேன். நான் சபைக்கு செல்வேன். நான் இதை செய்வேன். நான் ஒரு நல்ல... நான் நல்லதை செய்ய விரும்புகிறேன்'' என்று கூறலாம். ஆனால் அதற்கு தேவை என்னவெனில், அதை உறக்கத்தினின்று எழுப்பி நித்திய ஜீவனுக்கென்று கதற வைக்க, சுவிசேஷ அடியாகும். அது முன்பு கதறாத விதத்தில் கதறும் போது, பரிசுத்த ஆவி உள்ளே வருகிறது. அது ஆவியினால் பிறந்து புது - சிருஷ்டியாகி விடுகிறது. அப்பொழுது அது வளர ஆரம்பித்து. நடந்து, தேவனுக்குள் இருக்கிறது. பாருங்கள். இயற்கையில் தோன்றும் குழந்தை உலகத்தில் எப்படி இருக்கிறதோ, அப்படி. 63பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும் நமக்காக ஒன்று காத்திருக்கிறது. பாருங்கள். இயற்கை சரீரம் ஒன்று தாயிலிருந்து பிறந்த போது, அதை வரவேற்க ஆவிக்குரிய சரீரம் ஒன்று நிச்சயம் இருந்தது. இப்பொழுது அது பூமியாகிய தாயின் கர்ப்பத்தில் இருந்து கொண்டு தவித்து. வேதனைப்பட்டு, அழுது, (ஓ, தேவனே!) உழைத்து, வயதாகி, வியாதிப்பட்டு, எல்லாமே அதை தாக்குகின்றது. ஆனால், அதற்குள் இருக்கும் ஆவி நதிக்கு அப்பால் உள்ள தேசத்தை எதிர்நோக்கியிருக்கிறது. அது தவித்து, முறுக்கி, குதித்து கொண்டிருக்கிறது (ஆம், ஐயா). ஏனெனில், அதற்குள் என்றென்றைக்கும் ஜீவிக்கும் ஜீவன் உள்ளது. அது மரிக்க வேண்டிய ஒரு சரீரத்தில் குடிகொண்டுள்ளது. தாய் ஒருவள் அந்த இயற்கை சரீரத்தை பூமியில் விழ விட்டுக் கொடுத்து, ஆவிக்குரிய சரீரம் அதை அடைந்தது போல், நம்முடைய இயற்கை சரீரமும் பூமியில் விழுந்து... வானத்துக்குரிய சரீரம், அதை மேலே பிடித்துக் கொள்ளும். பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும் நமக்காக ஒன்று அங்கு காத்திருக்கிறது. ஆகையால், தான் நீங்கள் உலகத்தின் காரியங்களை மறந்து விடுகிறீர்கள். அவை உங்களுக்கு மரித்தவைகளாகி விடுகின்றன. அங்கு அந்த ஆவி உள்ளது. நாம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் போது, இந்த இரு ஆவிகளையும் கவனியுங்கள். 64பரிசுத்த ஆவி என்பது மறுபிறப்பு, அது நமக்குத் தெரியும். அது தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறத்தல். அப்படித்தான் நீங்கள் ஆவியினால் பிறக்கின்றீர்கள். ஆவியினால் பிறப்பதே மறுபிறப்பு. சரி. நீங்கள் ஆவியினால் பிறக்கின்றீர்கள். நீங்கள் ஆவியினால் பிறக்கும் போது, பரிசுத்த ஆவியினால் நிறையப்படுகின்றீர்கள். சரி. இந்த இரண்டும் பூமியில் உள்ள போது - மாம்சப் பிரகாரமானதும் ஆவிக்குரியதும் - சில நேரங்களில்... இதை நான் கண்டிருக்கிறேன். இப்பொழுது முடிக்கும் தருணத்தில், இதை சில நிமிடங்கள் கூறிவிட்டு முடிக்க விரும்புகிறேன். மாம்சப் பிரகாரமானதிலும், ஆவிக்குரியதிலும், இவ்விரண்டில் ஏதாவதொன்றில்... இதை எல்லோரும் கிரகித்துக் கொள்வீர்களென நம்புகிறேன். இப்பொழுது உங்களால் கூடுமானவரை அமைதியாயும் பயபக்தியாயும் இருங்கள். 65இதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? இதை நீங்கள் இன்று நமது சபைகளில் காண்கிறீர்கள் - நாம் ஸ்தாபனங்களிலிருந்து பிரிந்து வந்து இப்பொழுது சேர்ந்துள்ள கூட்டங்களிலும் கூட இதையெல்லாம் நாம் காண்கிறோம். ஒரு மனிதன் ஒரு வேத வாக்கியத்தை எடுத்துக் கொண்டு, வேதத்தில் வாக்குரைத்துள்ளபடியே அதை உயிர்ப்பிக்கிறார். அப்படி செய்வதை வேறொரு மனிதன் கண்டு, அவனும் அப்படியே செய்ய முயன்று தவறிப் போகின்றான். நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன். அவன் தவறுகிறான். ஏன்? அவனுக்கு வேதவாக்கியங்கள் பரிசுத்த ஆவியினால் ஊக்குவிக்கப்படுவதில்லை. அவன் பாவனை செய்ய முயல்கிறான். அவன் வேறொருவனைப் போல் நடந்து கொள்ள முயல்கிறான். அவன்... ஒருக்கால் அவன் மனிதனால் அனுப்பப்பட்டிருக்கலாம். ஒருக்கால் யாராகிலும் ஒருவர் அவனிடம், நீயும் அதையே செய்யக் கூடும் என்று சொல்லியிருக்கலாம். பாருங்கள், அவ்விதமாக இருக்கும் என்று இயேசு கூறினது போல். கடைசி நாட்களில், “யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல” என்று வேதம் முன்னுரைக்கிறது.... 66அங்கு மோசே நின்று கொண்டிருந்தான், அங்கு யம்பிரேயும் நின்று கொண்டிருந்தான். மோசே தன் கோலைத் தரையில் போட்ட போது, அது சர்ப்பமாக மாறினது. பார்வோன் உடனே, ''யம்பிரே, இங்கு வா, நீயும் அதையே செய்யக் கூடும்'' என்றான். அவனும் அதை செய்தான், பாருங்கள். ஆனால் என்ன நேர்ந்தது? மோசேயின் கோல் யம்பிரேயின் கோலை விழுங்கினது. பாருங்கள், அது வெளிப்படையானது. அவனுடைய கோல் எங்கே? அது சாதாரண உணர்ச்சிக்கு மேலாக அறியும் சக்தி போல் (Super - sensory perception). அது பிசாசின் ஆவியினால் உண்டாகும் கிரியை போல் என்று மாம்சப்பிரகாரமான சபைகள் கருதி விலகிச் செல்கின்றன. இந்த காரியங்கள்... அவர்கள், ''இது வேறொரு காலத்துக்குரியது என்கின்றனர்.'' அவர்கள் முழுவதும் தவறாயுள்ளனர். ஆனால் இந்த கடைசி நாட்களில் இந்த ஆவி உண்மையான ஆவியைப் பாவனை செய்வதைப் பாருங்கள். அங்கு தான் உங்களுக்கு தொல்லை நேரிடுகிறது. அது உண்மையான ஆவியைப் போலவே உள்ளது. ஆனால் அவன் அதை வெளிப்படையாக்க முடியாது, அதை பிடித்து வைக்க முடியாது. அதை நீடிக்க வைக்க முடியாது. ஓ, தேவனே! 67ஜனங்கள் வந்து. ''நானும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன்'' என்கின்றனர். ஆனால் அவர்கள் வாழும் விதத்தைப் பாருங்கள். அது ஒரு எழுப்புதலிலிருந்து மற்றொரு எழுப்புதல் வரை, ஒரு கூட்டத்திலிருந்து மற்றொரு கூட்டம் வரை நீடிப்பதில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லையென்று வெளிப்படையாகின்றது. ஒரு மனிதன் அல்லது ஒரு ஸ்திரீ தேவனுடைய ஆவியால் பிறந்திருந்தால், அவர்கள் ஆவியின் கனிகளைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் தேவ பக்தியாய் நடந்து, அந்த வாழ்க்கையை கடைபிடிப்பார்கள். பாருங்கள்? அவர்கள் உலகத்தின் காரியங்களிலிருந்து தங்களை விலக்கிக் கொள்வார்கள். தேவன் அவர்களுக்குள் அசைந்து தம்மை வெளிப்படுத்தி, அவர் உள்ளிலிருந்து கிரியை செய்கிறார் என்பதை நிரூபிக்கிறார். மற்றதோ பாவனை செய்தல், பாருங்கள். பாவனை செய்தல், அதுதான் காலந்தோறும் நடந்து கொண்டு வருகிறது. இஸ்மவேலையும், ஈசாக்கையும் பாருங்கள், அங்கிருந்து வழிவழியாக பாவனை செய்தலே. தீர்க்கதரிசியாகிய மோசேயையும், தீர்க்கதரிசியாகிய பிலேயாமையும் பாருங்கள். அவர்கள் எப்படி வழிவழியாக வருகின்றனர் என்று பார்த்தீர்களா? யூதாஸையும், இயேசுவையும் பாருங்கள். இந்த பரிசுத்த ஆவி கடைசி நாட்களில் தேவனுடைய முத்திரையாயிருக்கும் என்று இயேசு முன்னுரைத்துள்ளார். மிருகத்தின் முத்திரை எது? அது தேவனுடைய முத்திரையை புறக்கணித்தலே. தேவனுடைய முத்திரையைப் பெற்றிராத அனைவரும் மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக் கொள்வார்கள். இவை இரண்டும் ஆவியுடன் சம்பந்தப்பட்ட குறிகளானால் ஒன்று தேவனுடைய உண்மையான குறி, மற்றது விசுவாச துரோகத்தினால் (apostasy) கிடைப்பது. இது உங்களுக்குப் புரிகிறதா? 68பழைய ஏற்பாட்டில் போடப்படும் குறியைப் பாருங்கள். அநேக ஆண்டுகளுக்குப் பின்பு யூபிலி ஆண்டில் எக்காளம் ஊதப்படும் போது. அடிமைகள் விடுதலையாயினர். யாரெல்லாம் அடிமைத்தனத்தினின்று விடுதலையாக விரும்பினரோ, அவர்களெல்லாம் விடுதலை பெற்று செல்லலாம். ஆனால் சிலருக்கு அடிமைகளாகவே இருந்து விட விருப்பம் இருந்தது. எனவே அவர்கள் இந்த அடிமைகளை பலிபீடத்துக்கு கொண்டு சென்று, தேவாலயத்தின் கதவு நிலையத்தில் அவர்களுடைய காதை ஒரு கம்பியினால் குத்தினர். அவர்கள் சதாகாலங்களுக்கென்றும் குறியிடப்பட்டு தங்கள் எஜமானை சேவித்தனர். இன்றைக்கு நீங்கள் சத்தியத்தின் அடிப்படையில் சுவிசேஷ செய்தியைக் கேட்கின்றீர்கள். “உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் விடுதலையாகலாம் என்று தேவன் உங்களுடன் பேசுகின்றார். ஆனால் நீங்கள் எல்லைக் கோட்டை அடைந்து திரும்பிப் பார்த்து. சத்தியத்தை அறியும் அறிவை அடைந்து, அதன் பிறகு அதை புறக்கணித்தால், சாத்தான் உங்கள் காதை கம்பியினால் குத்துகிறான். நீங்கள் எப்பொழுதுமே அறிவை உபயோகிக்கும் விசுவாசியாகி விடுகிறீர்கள். நீங்கள் பக்தியுள்ளவர்களாய் சபைக்கு செல்வீர்கள், ஆனால் ஒருபோதும் பரிசுத்த ஆவியைப் பெற மாட்டீர்கள். பாருங்கள், அதன் பிறகு உங்கள் வாழ்நாள் முழுவதும் அதை சேவிக்கிறீர்கள். இப்பொழுது. மிருகத்தின் முத்திரையா அல்லது தேவனுடைய முத்திரையா? நாம் மிக அருகாமையில் இருக்கிறோம். 69பாருங்கள். வார்த்தையானது பரிசுத்த ஆவியினால் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதை கேட்டு, அதை அடையாளம் கண்டு கொண்டு. அதன்படி நடக்க வேண்டும். அநேகர் அதை கேட்பார்கள், ஆனால் அதை அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள். தேவன், ''இதுதான் உங்கள் நேரம் என்றால்.'' ''நான் உருளும் பரிசுத்தனாயிருக்க மாட்டேன். அதொன்றும். எனக்கு வேண்டாம்.'' பாருங்கள், அவர்கள் அதை அடையாளம் கண்டு கொள்வதில்லை. நாங்கள் கூட்டத்தில் இருக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் வல்லமையாக அசைவாடுவது வழக்கம். அன்றொரு நாள் அங்கு நான் உட்கார்ந்து கொண்டிருந்த போது, ஒரு தரிசனம் எனக்குண்டாகி சரியான காரியத்தை முன்னுரைத்தது நான், ''இதோ ஒரு இளைஞன் வருகிறான்'' என்று சொல்லி, ''இங்கு வா என்று உணவு விடுதியில் உணவு பரிமாறுபவனை சைகை காட்டி அழைத்து உனக்கு இருதய நோய் உள்ளது என்றேன். ''ஆம், அது முற்றிலும் உண்மை என்றான் அவன்.'' ''அங்கு வந்து கொண்டிருக்கும் ஸ்திரீயைக் கண்டீர்களா? இங்கு வா. உனக்கு மார்பகத்தில் கட்டி உள்ளது. அது இடது மார்பகத்தில். நீ மோசமான நிலையிலிருக்கிறாய். நீ ஒரு பாவி...'' ''முற்றிலும் உண்மை'' என்றாள் அவள். 70அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த போதகர்களும், மற்றவர்களும் சுற்றுமுற்றும் பார்த்து ஆச்சரியத்துடன், “என்ன இது!” என்றனர். ஒரு கூட்டத்துக்கு சென்று பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தினரின் நடுவில் சென்று அவர்களுடைய இருதயத்திலுள்ள இரகசியங்களை வெளிப்படுத்துவதை அவர்கள் காணும் போது. அற்புதம், ஆமாம் என்கின்றனர். பாருங்கள்? ஓ, சகோதரனே. பார், அது மறுபக்கத்தில் நடக்கும் ஒன்று. ஏதோ ஒன்று நடந்தது. இவைகளைக் கண்ட பின்பும் ஸ்திரீகள் தொடர்ந்து அதையே செய்து கொண்டிருக்கின்றனர். நாய் தான் கக்கினதைத் தின்னவும், பன்றி சேற்றிலே புரளவும் திரும்பிச் செல்வது போல மனிதர்களும் தங்கள் பழைய செயல்களுக்கு திரும்பிச் செல்கின்றனர். உங்களால் காணமுடியவில்லையா? நான் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது... 71பார் நண்பனே, நீ எந்நிலையில் இருக்கிறாய் என்பதை உணர வேண்டும். ஆகையால் தான் இந்த ஒலிநாடா, “சபைக்கு மாத்திரம்” என்று கூறினேன். பாருங்கள், “சபைக்கு மாத்திரம்.'' நீங்கள் வெளிச்சத்திலிருந்து... இருளிலிருந்து வெளிச்சத்துக்கும், மரணத்திலிருந்து ஜீவனுக்கும், சம்பிரதாய முறைப்படி கிறிஸ்துவைக் குறித்த அறிவில் விளைந்த கருத்திலிருந்து. மறுபடியும் பிறந்த அனுபவத்துக்கும் வந்து, உங்கள் வாழ்க்கையில் உலகத்தின் காரியங்களைத் தள்ளிவிட்டு என்ன நேரிட்டாலும் கிறிஸ்துவுக்காக நிற்பீர்களானால், அப்பொழுது உங்களில் ஏதோ சம்பவித்துவிட்டது. பாருங்கள்? உங்களில் ஏதோ ஒன்று பசியடைந்து, யாக்கோபை போல் செயல்பட ஆரம்பித்தது. பாருங்கள், நீங்கள் கர்த்தருடன் போராடி, அதன் பிறகு வித்தியாசமாக நடந்து கொள்கிறீர்கள். உங்களில் ஏதோ வித்தியாசமாயுள்ளது. நீங்கள் மாறிவிட்டீர்கள். இப்பொழுது அது. . . 72அப்படி நடப்பதற்கு முன்பு, அது உங்களுக்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். நான் இங்கு நின்று கொண்டு... என் தலையிலுள்ள மயிரெல்லாம் கீழே விழும் வரைக்கும், என் தோள்கள் தொங்கிப் போகும் வரைக்கும், எனக்கு தொண்ணூறு வயதாகும் வரைக்கும் பிரசங்கித்து வந்து, நீங்களும் நாள்தோறும் அதை கேட்டிருக்கக்கூடும். ஆனால் தேவன் அதை உங்களுக்கு உயிர்ப்பிக்காமல் போனால், நீங்கள் இன்னும் அதே நிலையில் இருப்பீர்கள். இரண்டு நாட்களாக இதைப் படித்து, இதைக் குறித்து ஜெபித்து வந்தேன். நான், ''ஆண்டவரே, இதை சபைக்கு கூறலாமா?'' என்று கேட்ட போது. ஏதோ ஒன்று. இதை சொல். அந்த நேரம் சமீபித்துவிட்டது. ''இதை சொல்'' என்றது. அவர் வெகுவிரைவில் என்னை இழுத்துக் கொண்டு விடுவார் என்னும் உணர்வு எனக்குத் தோன்றுகிறது. எனவே, இதை நீங்கள் அறிய விரும்புகிறேன். இயேசு, ''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.'' ஓ, உங்களுக்குத் தேவன் இருக்கிறார் என்றும், ஆபிரகாம் உங்கள் பிதாவாக இருக்கிறான் என்றும் நீங்கள் சொல்லுகிறீர்கள் என்று அறிவேன். அனால் இதை உங்களுக்குக் கூறுகிறேன், நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள் என்றார். (யோவான்.6:44, 8:3,44). அவர் மனிதாபிமானமுள்ளவர்களை, ஆசாரியர்களை, பெரிய மனிதர்களைப் பார்த்து, ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள் என்றார்.'' பாருங்கள்? 73ஆவியின் கனிகளைக் கவனியுங்கள். இப்பொழுது, பாருங்கள், அது உங்களுக்கு உயிர்ப்பிக்கப்பட வேண்டும். ''நோவா, ''என்ன தெரியுமா?'' என்றாவது ஒரு நாள் மழை பெய்யக்கூடும். எனவே, நான் சென்று பேழையை உண்டாக்குவேன். மழை பெய்தால், நான் பேழைக்குள் சென்று தண்ணீரில் மிதந்து சென்றுவிடுவேன்'' என்று எண்ணியிருப்பான் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. உங்களால் முடிகிறதா? இல்லை, அவன் அப்படி எண்ணவேயில்லை. அவன் அப்படி எண்ணியிருந்தால் (ஓ, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் இதை கேட்கட்டும்), வேதம் கூறினது போல் பரியாசக்காரர் தோன்றின போது, முதலாம் பரியாசக்காரன் அங்கு சென்று அவனைப் பரியாசம் செய்த மாத்திரத்தில், அவன் சுத்தியலைக் கீழே வைத்துவிட்டு, அங்கிருந்து நடந்து சென்றிருப்பான். இன்றைக்கு மனிதர் செய்வது போல். அவர்கள் இயேசுவுடன் தொடங்குகின்றனர். ஆனால், அவர்கள் சத்தியத்தைக் காணும் போது, அதிலிருந்து பின்வாங்கிப் போகின்றனர். அவர்களால் அதை தாங்க முடியவில்லை. அது என் ஊழியத்தை கிழித்தெறிந்து விடும் என்று அந்த பிரபல சுவிசேஷகர் கூறினது போல். பரிசுத்த ஆவி கிழித்தெறியும் ஒரு ஊழியத்துக்காக நான் கவலைகொள்ள மாட்டேன். அது கிழித்தெறியப்பட வேண்டும். ஆனால், பாருங்கள், அது பெருமை. அதில் அதிகமாக மனிதத்தன்மை அடங்கியுள்ளது. ஓ, இதை இப்பொழுது கவனியுங்கள். 74நோவா வயல்வெளியில் இருந்த போது. அவன் கேட்டு, அடையாளம் கண்டு கொண்டு, அதன்படி நடந்தான். எத்தனை பரியாசக்காரர் தோன்றின போதிலும், அவன் பேழையை உண்டாக்கிக் கொண்டேயிருந்தான். ''நோவா, நீ ஒரு உருளும் பரிசுத்தன்.'' ''அது என்னை சிறிதேனும் தொல்லைப்படுத்தவில்லை.'' அவன் பேழையை உண்டாக்கிக் கொண்டேயிருந்தான். அவன் கேட்டு, அது தேவன் என்று அடையாளம் கண்டு கொண்டான். அவன் அதை வேதவாக்கியங்களின் அடிப்படையில் நோக்கினான். அது அப்படித்தான் இருந்தது. ஆகவே என்ன நேர்ந்த போதிலும், அவன் பேழையை உண்டாக்கிக் கொண்டேயிருந்தான். 75மோசே எகிப்துக்குப் போகும் வழியில் ஒரு நாள் சிப்போராளிடம், “சிப்போராளே, உனக்குத் தெரியுமா? என் இலக்கண அறிவை சிறிது வளர்த்துக் கொண்டேன். கணிதம், இன்னும் மற்றவைகளையும் படித்துவிட்டேன். என் கல்வியறிவு அதிகரித்துவிட்டது. நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, இவைகளைப் படித்தேன். நான் எகிப்திலிருந்த போது ஒரு தவறு செய்துவிட்டேன். இப்பொழுது அங்கு திரும்பிச் சென்று அதை சரியாக்கிவிடுகிறேன் என்று கூறியிருப்பான் என்று உங்களால் எண்ணிப் பார்க்க முடிகிறதா? இல்லவே இல்லை. அவன் அப்படி கூறியிருந்தால், அவனுக்கு முதன் முறையாக எதிர்ப்பு எழுந்த போதே அவன் விழுந்திருப்பான். அவன் என்ன செய்தான்? அவனுக்குத் தெரிந்த கணிதம், கல்வியறிவு எல்லாவற்றையும் மறந்துவிட்டான். அந்த அறிவு தான் அவனைத் தொல்லையில் சிக்க வைத்தது. இன்றைக்கு சபையைத் தொல்லையில் சிக்க வைப்பதும் அதுவே. அங்கு கல்வியறிவு பெற்ற. ஆனால் ஆவியினால் பிறவாத போதகர் அநேகர் உள்ளனர். ஆண்களும், பெண்களும், இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும், உயரித்தெழுதலையும் குறித்து பிரசங்கிக்கப் படுவதை கேட்பதற்கு பதிலாக அறிவு நிறைந்த சொற்பொழிவுகளைக் கேட்க விரும்புகின்றனர். அதுதான் நம்மை இன்று தொல்லையில் சிக்கவைத்துள்ளது. பிரசங்கிமார்களுக்கு உயர் நிலைப்பள்ளியும் கல்வியும் அவசியமில்லை. நமக்கு பரிசுத்த ஆவியினால் நிறைந்த தேவனால் அழைக்கப்பட்ட மனிதர்களே தேவையேயன்றி. மனிதனால் உருவாக்கப்பட்ட ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் வேதசாஸ்திரம் தேவையில்லை. நமக்கு தேவனால் அழைக்கப்பட்ட மனிதர்களே தேவை. 76மோசே ஆடுகளை மேய்த்து, அதில் நிலைத்திருந்து, கல்வியை மறந்து விட்டான். அவனுடைய அறிவுத்திறன் தவறிவிட்டது என்பதை அவன் உணர்ந்தான். அவனுடைய கல்வியறிவு தவறிவிட்டது. அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, ஓ, மோசே, உன் பாதரட்சைகளைக் கழற்றிப் போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்னும் சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன் செவி கொடுத்தான். அது என்ன? கர்த்தருடைய தூதன் பேசின அந்த சத்தம் வேதபூர்வமானது. அவர் அவனுடைய தகப்பனாகிய ஆபிரகாமுக்கு, அவர்கள் நானூறு ஆண்டுகள் அங்கு அடிமைகளாயிருந்த பிறகு, அவர்களை நான் சந்தித்து பலத்த கரத்தினால் வெளியே கொண்டு வருவேன் என்று வாக்களித்தார். தேவனுடைய வேதவாக்கியம் அங்கு வெளிப்பட்டு நிறைவேறுகிறது என்பதை மோசே அடையாளம் கண்டு கொண்டான். இங்கு ஒரு நிமிடம் நிறுத்துகிறேன். அது உங்களில் ஆழமாக பதியட்டும். இப்பொழுது நான் என்ன பேசிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களால் காண முடிகிறதா? தேவனுடைய வார்த்தை உங்களுக்கு முன்பாக வெளிப்பட்டு நிறைவேறிக் கொண்டிருக்கிறது. நீங்களோ அதை உணராமல் இருக்கிறீர்கள். இப்பொழுது சோதோம் கொமோராவை நினைத்துப் பாருங்கள், கடைசி நாட்களுக்கென்று கிறிஸ்து அளித்துள்ள வாக்குத்தத்தத்தை நினைத்துப் பாருங்கள். 77மோசே அதை அடையாளம் கண்டு கொண்டான். அது வேதபூர்வமானது. அது ஒரு வாக்குத்தத்தம். அவன் கேட்டு, அதை அடையாளம் கண்டு கொண்டான். சகோதரனே, அவன் போய் அதை செய்வதற்கென, ஏதோ ஒன்று அவனுக்குள் வந்தது. அவன் அதன்படி நடந்தான். அவன் அங்கு சென்று பார்வோனை நிறுத்த முடிந்தது. அவன் விரும்பின நேரத்தில் அவனால் வாதைகளை வரவழைக்க முடிந்தது. அவனால் சிவந்த சமுத்திரத்தை பிளக்க முடிந்தது. ஏனெனில் அவன் கேட்டு, அடையாளம் கண்டு கொண்டான். அவன் தேவனுக்கு பதிலாக செயல் புரிந்தான். அவர், ''நான் உனக்குத் தேவனாயிருப்பேன். நீ எனக்கு தீர்க்கதரிசியாயிருப்பாய்“ என்றார். அவனோ, ''என்னால் முடியாது“ என்றான். அவர், “அப்படியானால் நீ தேவனாயிரு, ஆரோன் உனக்குத் தீர்க்கதரிசியாயிருப்பான். நீ எப்படியும் போகத்தான் வேண்டும்!” என்றார். அவன், “நல்லது. நான் போய் காரியங்களை எடுத்துரைத்து நேராக்குவது நலம் என்று கூறவில்லை.'' 78எலியா கர்மேல் பர்வதத்தின் மேல் இருந்து கொண்டு, பாருங்கள், இந்த தேசம் பயங்கரமாக பாவம் நிறைந்ததாயுள்ளது. நான் ஆகாபிடம் சென்று அவன் தன்னைக் குறித்து வெட்கப்பட வேண்டும் என்று கூறுவது நலம். நான் மலையின் மேல் சென்று, ஜனங்கள் நான் பட்டினியால் சாவதை காணச் சகிக்க முடியாத வரைக்கும் உபவாசம் இருப்பது நலம்“ என்று கூறவில்லை. இல்லவே, இல்லை. அதுவல்ல. அவன், நீ கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிரு. அங்கே உன்னைப் போஷிக்க காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்“ என்னும் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதை அடையாளம் கண்டு கொண்டு, அதன்படி நடந்தான். 79தேவனுக்கும் பாகாலுக்குமிடையே பலப்பரீட்சை நிகழ வேண்டிய நேரம் வந்த போது அவன், “நீங்கள் போய் உங்கள் பலிகளைக் கொண்டு வந்து, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து, உங்கள் தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள்'' என்றான். அவர்கள் தங்களை கீறிக்கொண்டு, மேலும் கீழும் குதித்து ஆடி, உரக்க சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள், எலியா அவர்களைப் பரியாசம் பண்ணி, ”இன்னும் உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள். அவன் பிரயாணம் போயிருப்பான், அல்லது தூங்கினாலும் தூங்குவான் என்றான். ஓ, சகோதரனே! “நான் யேகோவாவில் விசுவாசம் உள்ளவன். ஆகையால் நானும் இதை செய்யமுடியும்” என்று வேறு யாராகிலும் கூற முடியுமா? ஓ, வேண்டாம், அதை பாவனை செய்யாதீர்கள். வேண்டாம், வேண்டாம். நீங்கள் எலியாவாக இருப்பதற்கு தேவன் உங்களை அழைத்திருந்தாலொழிய, நீங்கள் எலியாவாக இருக்க முயல வேண்டாம். ஆம், ஐயா! “நானும் யேகோவாவின் ஊழியக்காரன்” என்று கூற வேண்டாம். அங்கு எழுநூறு பேர் இருந்தனர் (ஏழாயிரம் பேர் - தமிழாக்கியோன்), அவர்களில் ஒருவரும் இதைச் செய்ய துணிச்சல் கொள்ளவில்லை. அவன் காளையை சந்து சந்தாகத் துண்டித்து, அதன் மேல் தண்ணீர் ஊற்றி, “கர்த்தாவே, இதை உம்முடைய வார்த்தையின்படியே செய்தேன்” என்றான். பாருங்கள்... இதை வேறுயாராகிலும் செய்ய முயன்றிருந்தால், அது முழு தோல்வியடைந்திருக்கும். அது உங்களுக்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் அதை உங்களுக்கு வெளிப்படுத்தித் தர வேண்டும். 80இன்றைக்கு அதுதான் விஷயம். நீங்கள் பீடத்துக்கு சென்று, ''அல்லேலூயா, அல்லேலூயா, கர்த்தாவே, எனக்கு பரிசுத்த ஆவி வேண்டும். அல்லேலூயா, அல்லேலூயா'' என்று சொல்ல முடியாது. முடியவே முடியாது. ஆனால் சகோதரனே, சகோதரியே. பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையை உனக்கு ஊக்குவிக்கும் போது, நீ இருக்கையை விட்டு செல்வதற்கு முன்பே பரிசுத்த ஆவியைப் பெற்று கொள்கிறாய். உனக்குள் இருக்கும் ஏதோ ஒன்று சுட்டெரிக்கப்படுகிறது. இதை செய், அதை செய் என்று போதகர் உனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. பழைய இலைகள் உதிர்ந்து போய், புதிய இலைகள் தோன்றுகின்றன. அது உனக்கு ஊக்குவிக்கப்படுகிறது. போதகர் வேதத்திலிருந்து சத்தியத்தைப் பிரசங்கிக்கும் போது, அவர் மேல் கோபங்கொள்ளமாட்டாய். அதை நீ விரும்பி கையை நீட்டி பெற்றுக் கொள்வாய். அது உன் ஆத்துமாவுக்கு ஆகாரமாயிருக்கும். 81இயேசுவும் கூட, நான் செய்ய விரும்புவதை செய்ய மாட்டேன். ''பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயேன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார்'' என்றார். அந்த வார்த்தைகள்... அவர் இம்மானுவேல். இயேசு பூமியில் தேவனாயிருந்தார். தேவன் வாசம் பண்ணின சரீரம் அவரே. தேவன் வாசம் பண்ணின கூடாரம் அவரே. ஆமென். அப்படியிருந்தும் கூட, கன்னிகை வயிற்றில் பிறந்த தேவனுடைய குமாரன், ஆவியின் பரிபூரணத்தைப் பெற்றிருந்த இம்மானுவேல் (அவர் ஆவியை அளவில்லாமல் பெற்றிருந்தார்), தம்மாம்சத்தில், என் பிதா எனக்கு முதலில் காண்பிக்காமல், ''நான் ஒன்றையும் செய்யமாட்டேன்'' என்றார். சாத்தான், ''இந்த கற்களை அப்பங்களாக்கி, ஒரு அற்புதத்தை செய்யும். அதை நான் காணட்டும்'' என்றான். அவர், “மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் பிழைப்பதில்லை என்று எழுதியிருக்கிறதே என்றார்....'' ஓ, என்னே! ஆனால் ஜனங்கள் பசியுற்றபோது, அவர் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேர்களைப் போஷித்தார். ஓ, அல்லேலூயா! நான் கூறுவது புரிகிறதா? 82பாவனை செய்ய முயல வேண்டாம். அதுதான் இன்று பெந்தெகொஸ்தேவிலுள்ள தொல்லை. அதுதான் இன்று சபையிலுள்ள தொல்லை. அநேகர் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதாக பாவனை செய்ய முயல்கின்றனர். அநேகர் தெய்வீக சுகமளித்தலை பாவனை செய்ய முயல்கின்றனர். நீங்கள் அப்படி செய்யக் கூடாது. அது தெரிந்து கொள்ளுதலின் மூலம், தேவன் அழைப்பதன் மூலம் வருகிறது. நீங்கள் தாயின் கர்ப்பத்திலிருந்து பிறக்கும்போதே அதனுடன் பிறக்கிறீர்கள். வரங்களும், அழைப்புகளும் மனந்திரும்புதலின்றி அளிக்கப்படுகின்றன. ஒ, என்னே! அது உண்மை. நீங்கள் இல்லாத ஒன்றாக உங்களை பாவனை செய்து கொள்ள முடியாது. ஆனால் தேவன் உங்களை அழைப்பாரானால், அவர் உங்களை அழைத்ததன் நிமித்தம் உலகிலேயே மிகவும் நன்றியுள்ள நபராயிருங்கள். அப்பொழுது அது உங்களுக்கு மிகவும் தத்ரூபமாகிவிடுகிறது. 83நமக்கு நேரமிருந்தால், அன்றொரு நாள் அணில்கள் சிருஷ்டிக்கப்பட்ட விதத்தைக் குறித்து பேச விரும்புகின்றேன். அது என்னை திரும்பிப் பார்க்கச் செய்தது. ஹாட்டி பின்னால் உட்கார்ந்து கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அது எப்படி முடியும்? அது முடியாது. ஆனால் அது ஊக்குவிக்கப்பட்டது. உயிர்க்கப்பட்டது. வார்த்தை உரைக்கப்பட்ட போது, அது நிறைவேறினது. அல்லேலூயா! 84பவுல், “இந்த கடலில் நான் இரவும், பகலும் பதினான்கு நாட்கள் இருக்கின்றேன். நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன் எதுவுமே காணப்படவில்லை. நான் அவர்களிடம் போய், ''திடமனதாயிருங்கள். தேவன் எப்படியும் நம்மைக் காப்பார் என்ற சொல்லலாம் என்று நினைக்கிறேன்'' என்று எண்ணியிருப்பான் என்று நினைக்கிறீர்களா? ஒ, தேவன் அவ்வாறு கிரியை செய்வதில்லை, தேவன் அப்படி செய்வதில்லை. சகோதரனே, உன் விசுவாசம் நல்லதுதான். உன் விசுவாசம் அற்புதமானது. ஆனால், அது உன்னில் ஊக்குவிக்கப்படும் வரைக்கும்! 85ஓ, அங்கு சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். ''அதை நான் கண்ட பின்பு... என் கால் காரின் 'ஆக்சலரேடர்' (accelerator) மேல்வைக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கை நான் மணிக்கு 120மைல் வேகத்தில் கடந்து செல்லமுடியும்'' என்று சொன்னால், அது உண்மைதான். என் காலின் கீழ் அந்த சக்தி உள்ளது என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் ''போ'' என்னும் சிக்னல் வரும் வரைக்கும் காத்திருப்பது நலம். அல்லேலூயா! நான் கூறுவது உங்களுக்குப் புரிகிறதா? போ என்னும் சிக்னல் வரும் போது, அது சரிதான். அது உங்களுக்கு ஊக்குவிக்கப்பட்டு தேவன் அதை உங்களுக்கு, அவர் முன்பு செய்து வந்ததுபோல் தெரியப்படுத்தினால். அது சரிதான். ஆனால் அவர் அதை செய்யும் வரைக்கும், ஒருகூட்டம் யூதாஸின் மக்கள் பாவனை செய்து, அவர்களைப் போலவே ''நானும் ஒருவன், நானும் ஒரு கிறிஸ்தவன் என்னும் மனப்பான்மையைக் கொண்டுள்ளனர்.'' 86ஓ, ஸ்கேவாவின் குமாரர் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அவர்கள், “பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பேரில் ஆணையிட்டு உனக்குக் கட்டளையிடுகிறோம். வெளியே வா'' என்றனர் (அப்.19:13). பொல்லாத ஆவி அவர்களை நோக்கி, ''இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார்?'' என்று கேட்டது. சரி எது, தவறு எது என்று வெளிப்படும் நேரம் வந்து கொண்டிருக்கிறது. அது இன்றைய கிறிஸ்தவனில் காணப்படுகிறது. அது இன்றைய சபைகளில் காணப்படுகிறது. நான் உங்களை நீண்ட நேரம் வைத்திருக்கிறேன். இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்று விரும்புகின்றேன். 87பவுல், நான் சென்று ''திடமனதாயிருங்கள்'' என்று கூறப்போகிறேன் என்று சொல்லவில்லை.'' இல்லை. அவன் என்ன செய்தான்? ஒரு தூதன் பேசுவதை அவன் கேட்டான். அது அவனிடம் எப்பொழுதும் பேசும் தூதன் என்று அவன் அறிந்து கொண்டான். அவன் அடையாளம் கண்டு கொண்டு, அதன் பிறகு செயல்புரிந்து. அங்கு சென்று, “திடமனதாயிருங்கள். ஏனென்றால் நான் சேவிக்கிறவரான தேவனுடைய தூதனானவர் நேற்று ராத்திரியிலே என்னிடத்திலே வந்து நின்று. கப்பலிலுள்ள ஒன்றும் இழக்கப்படாது என்று ஒரு தரிசனத்தை எனக்குக் காண்பித்தார். ஆனபடியினால் திடமனதாயிருங்கள். போய் பகல் உணவு உண்ணுங்கள். எல்லாமே சரியாகிவிடும் என்றான் (அப்.27:22-25) ஆமென். அது உனக்கு ஊக்குவிக்கப்படும் போது, தேவன் அதை சரியாக்குகின்றார். 88இங்கு நான் ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்கிறேன். அது இங்குள்ளது. நாம் எல்லாவற்றின் முடிவில் வந்திருக்கிறோம். முடிக்கும் தருணத்தில், இதை உங்களிடம் கூற விரும்புகிறேன். தேவன் உங்களுக்கு சில காரியங்களை வெளிப்படுத்தி தந்தார் என்று நம்புகிறேன். எல்லாமே முடிவில் வந்திருக்கிறது. அன்றொரு இரவு யாரோ ஒருவர் கேட்டார். அது சகோ. ஃபிரட் சாத்மன் என்று நினைக்கிறேன். நாங்கள் முடிவு காலம் எவ்வளவு அருகாமையில் உள்ளது என்பதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். 89அந்த தரிசனம் ஐந்து நாட்கள் கழித்து அப்படியே பிழையின்றி நிறைவேறினதை சகோ. டீ மாஸ்ஷகாரியன் கண்ட போது, அவர் மயக்கம் போட்டு விழுந்துவிடுவார் போலிருந்தது. அவர் என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டு, ஜோசப் எப்படியிருக்கிறான்? என்று கேட்டார். நான், ''நன்றாயிருக்கிறான்'' என்றேன். அவர். அவன் தரிசனங்கள் காண்பதுண்டா? என்றார். நான், ''ஆம்'' என்றேன். அவன் சகோ. உட்டின் மகன் டேவிட் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுவதை, அது நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே என்னிடம் கூறினான். அது அப்படியே நடந்தது. அவர், “அது குடும்பங்களில் தொடர்ந்து வருகிறது'' என்றார். நான், “நல்லதும், பொல்லாங்கானதும். இவ்விரண்டுமே குடும்பங்களில் தொடர்ந்து வருகிறது'' என்றேன். 90அன்று நானும் ஃபிரட்டும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ஃபிரட் என்னிடம், ''சகோ. பிரான்ஹாமே, இந்த கருத்து எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்டார். நான், “ஃபிரட், பாருங்கள். நாம் இயற்கையை எடுத்துக் கொள்வோம். தேவன் இயற்கையில் கிரியை செய்கிறார். என்ன நடந்ததென்று பாருங்கள். சூரியன் கிழக்கில் உதிக்கிறது. நமக்குள்ள மிகப் பழமையான நாகரீகம் சீனா” என்றேன். அது நம்மெல்லாருக்கும் தெரியும். நமக்குள்ள மிகப் பழமையான நாகரீகம் சீனா. சரி. நாகரீகம் மேற்கு திசையை நோக்கி இதுவரை நகர்ந்து வந்தது. மேற்கு கரையை நீங்கள் விட்டுப் புறப்பட்டால், நேராக எங்கு செல்வீர்கள்? சீனாவுக்கு, நிச்சயமாக நாம் முடிவுக்கு வந்திருக்கிறோம். தீர்க்கதரிசி, ஒரு நாள் உண்டு, சூரியன் கடந்து சென்று கொண்டிருக்கும் போது. அது இரவுமல்ல, பகலுமல்ல. ஆனால் சாயங்காலத்தில், அது இங்கு முடிவதற்கு முன்பு, மறுபடியும் அதே வெளிச்சம் உண்டாகும் என்றான். இயேசு, ஒரு முன்மாரி ஒரு பின்மாரி உண்டாகும். பின்மாரி ஒரே காலத்தில் முன்மாரியையும், பின்மாரியையும் தோன்றச் செய்யும் என்றார். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். 91இங்கு பாருங்கள். இதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். அரசியல் முடிவுக்கு வந்திருக்கிறது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இன்று எனக்கு ஏதாவதொன்றை காண்பியுங்கள்... இந்த தேசம் ஊழலிலும், தேவ பக்தியற்ற காரியங்களிலும் தலை சிறந்து விளங்குகிறது. லூயிவில்லில் வெளியாகும் கூரியர் செய்தித்தாளை படித்தீர்களா? உலக அழகியை தேர்ந்தெடுக்கும் போட்டி அங்கு நடைபெற்றது. ருஷியாவைத் தவிர மற்றெல்லா நாடுகளும் தங்கள் அழகிகளை இந்த போட்டிக்கு அனுப்பியிருந்தனர். அவர்கள் க்ரூஷேவிடம் அவர் நாட்டு அழகி ஏன் பங்கு கொள்ளவில்லை என்று கேட்டதற்கு அவர், “ருஷியாவில் பெண்கள் அரை நிர்வாணிகளாய் ஆண்கள் முன் நடப்பதற்கு அனுமதியில்லை'' என்றார். ஒரு அஞ்ஞான தேவபக்தியற்ற நாடு, கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் நம் மேல் நிந்தையை வருவிக்கிறது. அவர், ”ருஷியப் பெண்கள் உடைகளை களைந்து அப்படி நடக்க அவர்களுக்கு அனுமதியில்லை. ருஷியாவில் குட்டை கால் சட்டை போன்றவைகளை உடுத்து நடக்கும் பெண்களைக் காணமுடியாது“ என்றார். அது தேவ பக்தியற்ற தேசம். கிறிஸ்தவர்களென்று அழைத்துக் கொள்ளும் நாமோ! 92''போஜன பீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது. அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யார் பால் மறந்தவர்கள்? கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும் இருக்கும். பரியாச உதடுகளிலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன். இதுவே இளைப்பாறுதல். அவர்கள் கேட்க மாட்டோம் என்கிறார்கள்'' என்று வேதம் கூறுவதில் வியப்பொன்றுமில்லை (ஏசா.28:8-12). நாம் அறிவில் விளைந்த நமது சொந்த கருத்தைப் பெற்றுள்ளோம். ஓ, நாள் முழுவதும் இதில் நிலைத்திருந்து பிரசங்கித்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! அரசியலில் ஊழல்! டெமாக்ரட்டுகள், ரிப்பப்ளிக் கன்கள் அனைவருமே மிகவும் தாழ்ந்தவராகி விட்டனர். அது என்ன? இலஞ்சம் வாங்கும் கூட்டம். அதில் பணிபுரியும் மறுபடியும் பிறக்காதவர் அனைவரும் பிசாசினால் உண்டானவர்கள். இவ்வுலகிலுள்ள ராஜ்யங்கள் அனைத்தும் எனக்கு சொந்தம் என்று சாத்தான் உரிமை கோரினான். இயேசு அவனுடன் அதைக் குறித்து விவாதிக்கவில்லை. உலகம் பிசாசின் கட்டுக்குள் உள்ளது. அரசாங்கத்துக்கு வேலை செய்யும் ஒவ்வொரு மனிதனும், அவன் கிறிஸ்தவனாயிராமல் போனால், பிசாசுக்கு சொந்தமானவனாக இருந்து பிசாசுக்கு, வேலை செய்கிறான். இந்த நாடுகள் அனைத்தும் இயேசு கிறிஸ்து வரும்போது விழுந்து போகும். ஆயிரம் வருட அரசாட்சி ஒன்று இருக்கும். 93இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று பாருங்கள். கிறிஸ்தவர்களுக்காக நான் காசு செலவழிக்கிறேன் என்று அவர்கள் என்னைப் பார்த்து கூச்சலிட்டு, மதச் சம்பந்தமான இயக்கத்திற்காக பணம் செலவழிக்கும் குற்றத்துக்காக எனக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பார்க்கின்றனர். விஸ்கிக்கும், பீருக்கும், சிகரெட்டுகளுக்கும் ஆண்டொன்றுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்து அவர்கள் நாட்டை பாழாக்குகின்றனர். அப்படியிருக்க இயேசு கிறிஸ்துவின் வாசலில் நின்று கொண்டு, நீதியை பிரசங்கிக்கும் எனக்கு சிறைவாசமாம். அவர்கள் பொல்லாப்பு நிறைந்த, தாழ்வான காரியங்களை தேர்ந்தெடுத்து, தங்கள் ஞானத்தினாலும், யுக்தியினாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உருவாக்கி, அவை உலகத்தையே பாழ்படுத்தி, பெண்களை இழிவான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. இது நாட்டுக்கு மிகப் பெரிய சாபமாக அமைந்திருந்தும் கூட, அவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால், சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கென ஜனங்கள் எனக்கு கொடுக்கும் சில டாலர்களைக் கொண்டு நான் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வருவதற்காக, அவர்கள் என்னை சிறைக்கு அனுப்பப் போகிறார்களாம். நான் பணக்காரன் அல்ல. என்னால் அதிக பணம் செலவழிக்க முடியாது. இருப்பினும் அவர்கள் என்னை இரண்டு ஆண்டுகள் சிறையில் வைக்கப் போகிறார்களாம். விரைவில் விசாரணை நடக்கவிருக்கிறது. ஓ, எவ்வளவு இழிவான, அசுத்தமான செயல்! தேவன் இரக்கமாயிருப்பாராக. 94இதை கூற விரும்புகிறேன். தேவன் அணுகுண்டை அனுப்புவதற்கு முன்பு இது தேவனுடைய வழியாக இருக்கக்கூடும். அவர்கள் ஏதாவதொரு தவறைச் செய்ய வேண்டும். அவர்கள் அவருடைய அபிஷேகம் பண்ணினவரை ஒரு முறையாவது தொட வேண்டும். இல்லையென்றால்... ''நான் தெரிந்து கொண்டவனைத் தொடாமலிருங்கள்“ என்று இந்த வேத வாக்கியம் உரைக்கிறது. அது உண்மை. அவர்களை நியாயத்தீர்ப்புக்கு கொண்டு வர இப்படி ஏதாவதொன்று நடக்க வேண்டும் - தானியேலின் நாட்களிலும் மற்ற நாட்களிலும் நடந்தது போல... அது வரட்டும். கர்த்தாவே, நான் உமது ஊழியக்காரன். அது உண்மை. ஒ, ஆமாம். 95அரசியல், தாழ்ந்த நிலை! நாடு, பாழடைந்து விட்டது! அவர்கள் இராணுவ வீரர்களை இப்பொழுது குட்டை கால் சட்டை அணியச் செய்யப் போகிறார்கள். ஓ, என்னே! அரசியல், போர், அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. சர்வாதிகாரிகள் தவறு செய்கின்றனர். அரசியல் தவறிழைக்கின்றது (தேவன் அளித்த தாவீது ராஜாவைப் போல், அவர்கள் ஏன் தேவனுக்கு பயந்த ராஜா ஆளும் முறையைக் கடைபிடிக்கக் கூடாது?) ஜனநாயகம் உருவான போது, இங்கிலாந்திலுள்ள ஒரு பெரிய பிரபு. “இப்பொழுது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் ஒரு நேரம் வரும், அப்பொழுது அது ஒன்று மற்றதாகிவிடும். அது எல்லாம் பாய்மரமாகவும், நங்கூரம் எதுவும் இல்லாதது போல் இருக்கும்” என்றார். அவர் கூறினது உண்மை. அவர், அரசியல்வாதிகள் தெருமுனையில் எழுப்பப்பட்ட சோப்பு பெட்டிகளில் நின்று கொண்டு, கோணலான காரியங்களைக் கொண்டு அரசாங்கத்தை பாழ்படுத்தி விடுவார்கள்“ என்றார். அந்த மனிதன் கூறினது முற்றிலும் உண்மையே. அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. 96ஒரு மனிதன் குடித்து வெறித்து, அவன் விரும்பும் எல்லாவற்றையும் கிழித்தெறியலாம். அவனுக்கு அரசாங்கத்தில் எல்லோரையும் தெரிந்திருப்பதால், அதைக் குறித்து ஒன்றுமே கூறப்படுவதில்லை. ஆனால், அரசாங்கத்தில் யாரையும் தெரியாத ஒரு ஏழை அல்லது வேறுயாரும் அதைச் செய்தால், அவனுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. ஊழல், இழிவான, அசுத்தமான செயல்! அவர்களில் நாற்பது சதவிகிதம் ஆண் புணர்ச்சிக்காரர். அதை சிந்தித்துப் பாருங்கள். மறுபடியும் சோதோம் கொமோரா! பக்தியுள்ளவர்கள் என்று கருதப்படும் அந்த கூட்டம். 97அடுத்த ஜனாதிபதி வரும் போது என்ன நடக்குமென்று வியக்கிறேன். தேவன் தேவ பக்தியுள்ள ஒரு மனிதனை நமக்கு ஜனாதிபதியாகக் கொடுத்தார். ட்வைட் ஐசன்ஹவர் என்பவரை. இப்பொழுது... அடுத்தது யார் வரப்போகிறார் என்று பாருங்கள். நிச்சயமாக அது ஒரு கருங்காலியாக இருக்கும். யோசேப்பை அறியாத ஒரு பார்வோன் வரப் போகிறான்! அதை ஞாபகம் கொள்ளுங்கள்! இன்னும் சிறிது நேரத்தில், அதற்கு வருவோம். அரசியலில் ஊழல் பெருகிவிட்டது. அதை நாமறிவோம். போர் முடிவுக்கு வந்துள்ளது. ஓ, ஒரு காலத்தில் அவர்கள் கற்களை எறிந்து, கல்கோடாரியினால் ஒருவருக்கொருவர் தலையில் அடித்து போர் நடத்தினர். அதன் பிறகு அவர்கள் வில்லில் நாணேற்றி அம்பு எய்தனர். அதன் பிறகு துப்பாக்கிகள், மெஷீன் துப்பாக்கிகள், ஜெர்மனியில் எண்பத்தெட்டு போன்ற பெரிய துப்பாக்கிகள் உபயோகிக்கப்பட்டன. அதன் பிறகு அவர்கள் கை வெடிகுண்டு எறிந்து விஷவாயு உபயோகித்தனர். ஆனால், இப்பொழுதோ அவர்கள் ஹைட்ரஜன் குண்டைப் பெற்றுள்ளனர். போர் முடிவை அடைந்துள்ளது. எல்லா நாடுகளும் அதைப் பெற்றுள்ளன. நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? ஒரு சிறு நாடும் கூட. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நெம்புகோலை நிமிர்த்தி விடுவதே. அது எரிந்து சாம்பலாகி விடும். போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆமென். அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. 98கல்வியும் முடிவுக்கு வந்துள்ளது. சிறுவர் புரியும் குற்றம் (Juvenile delinquency) முடிவுக்கு வந்துள்ளது. பிள்ளைகளுக்கு இனி நம்பிக்கையேயில்லை. அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. நீங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க முடியாது. அவன் பள்ளியை விட்டு வெளி வரும் போது, உள்ளே சென்ற போது இருந்தததைக் காட்டிலும் இரட்டிப்பாக நரகத்தின் பிள்ளையாகி விடுகிறான். உபாத்தியாயர் ஏதாவது கூறினால் அவர் கொல்லப்படுகிறார். அவர்கள் ஒரு சிறு கூட்டமாக சேர்ந்து கொண்டு உபாத்தியாயர் வெளியே வரும் போது அவரைக் கட்டிப் போட்டு சுட்டுக் கொன்று விடுகின்றனர். இப்படியாக நாம் இரண்டாயிரம் உபாத்தியாயர்களை இழந்துவிட்டோம். ஒ, ஒரு நிமிடம் பொறுங்கள், கடந்த ஆண்டில் அது இருபதாயிரம் உபாத்தியாயர்கள் என்ற நினைக்கிறேன். நான் உபாத்தியாயர்களை குறை கூற மாட்டேன். நானும் அவர்களுடைய நிலையில் இருந்தால், மாணவர்களுக்கு அறிவுரை எதுவும் கூறமாட்டேன். எங்கு பார்த்தாலும், “பிள்ளைகளுக்கு, கல்லூரி கல்வி அளியுங்கள்'' என்னும் விளம்பரங்களைக் காண்கிறோம். அவர்களுக்கு அது அவசியம் தான், ஆனால் பிசாசு அவர்களைப் பிடித்துக் கொண்டு விட்டான். ஹாலோவின் இரவன்று ஒரு வாசலைப் பிடுங்கிக் கொண்டு போய் தொங்கவிடுவது, அல்லது விவசாயி ஒருவனின் குதிரை வண்டியை சாலையில் கொண்டு போய் விட்டுவிடுவது. இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் மாணவர்களுக்கு சாதாரணம் தான். ஆனால், இப்பொழுது அவர்கள் பைத்தியம் பிடித்த செயல்களைப் புரிகின்றனர். அவர்கள் சுட்டு, கொலை செய்து. விஷம் கொடுத்து, இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். எனக்கு அடுத்த சந்ததி இப்படி செய்கின்றது. 99குழந்தை பிரசவம், தாய்மை முடிவுக்கு வந்துள்ளது. கருத்தடை எல்லாவிடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த இடத்தை சிறு நாய்கள் எடுத்துக் கொண்டுள்ளன. ஒழுக்கம், எங்கு பார்த்தாலும் ஒழுக்கமே இல்லை. பெண்கள் அவலட்சணமாய் உடுத்துகின்றனர், தொலைக் காட்சியின் மூலம் ஹாலிவுட்டின் பொல்லாத மக்கள் காண்பிக்கப்பட்டு, அவர்கள் உபயோகிக்கும் அழகு சாதனங்கள், அவர்களுடைய நடை உடை பாவனைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு வருகின்றன. எல்லாமே முடிவுக்கு வந்துள்ளது! கல்வி முடிவுக்கு வந்துள்ளது. அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. போர் முடிவுக்கு வந்துள்ளது. நாகரீகம் - முடிவுக்கு வந்துள்ளது. இவையனைத்துமே முடிவுக்கு வந்துள்ளது. அப்படியானால் நாம் என்ன செய்யப் போகிறோம்? அடுத்தபடியாக என்ன? நாம் எல்லாவற்றின் முடிவுக்கும் வந்திருக்கிறோம். 100சபை வாழ்க்கையும் - சாதாரண சபை - முடிவுக்கு வந்துள்ளது. இது சிறிது கடினமாக ஒலிக்கும். ஆனால் மாம்சப்பிரகாரமான சபை, ஏசாவின் சபை - முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அது என்ன செய்து கொண்டிருக்கிறது? சபைகளின் சங்கத்துக்குள் சென்று கொண்டிருக்கிறது. முடிவில் அது ரோமானிய மார்க்கத்தை சேர்ந்து கொண்டு... கத்தோலிக்க மார்க்கத்தை சேர்ந்து கொண்டு கம்யூனிஸத்துக்கு எதிராக போராடும். போப் ஜான் எல்லா சபைகளையும் திரும்ப வரும்படி அழைக்கிறார். அவர்கள் வருவார்கள். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதன்படி, அவர்கள் எல்லோரும் ஒன்றாக இணைவார்கள். நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, ஒரு நிமிடம் பொறும். நீங்கள் வரிசையை விட்டு விலகுகின்றீர்கள் எனலாம். நான் விலகினால், இந்த வேதாகமத்தை எழுதின தேவனும் வரிசையை விட்டு விலகுகின்றார்.'' நீங்கள் இந்த விஷயத்தில் மிகாயாவாக இருக்க வேண்டும். 101அன்றொரு இரவு மாரீஸ் செருல்லோ என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, அந்திக் கிறிஸ்து எங்கே தெரியுமா? யூதர்கள் தான் அந்திக் கிறிஸ்து என்றார். நான், “மாரீஸ், நீங்கள் ஒரு யூதனாயிருந்து அப்படிக் கூறுவதா?” என்றேன். அவர், “அவர்கள் எல்லாரைக் காட்டிலும் அதிகமாக தேவனை வெறுப்பவர்கள்” என்றார். நான், மாரீஸ், அப்படி சொல்லாதீர்கள்! அந்திக் கிறிஸ்து எருசலேமிலிருந்து வருவதாக எனக்கு வேதத்திலிருந்து காட்டுங்கள் பார்க்கலாம். அந்திக் கிறிஸ்து ரோமாபுரியிலிருந்து வருகிறான், எருசலேமிலிருந்து அல்ல என்றேன். அவர், “நல்லது. பாருங்கள், நான்... அவர்கள் தேவனை வெறுப்பவர்கள்” என்றார். நான், ''ஆம், நாம் காண வேண்டிய ஒரு நாள் உண்டாக வேண்டுமென்பதற்காக, அவர்கள் கண்களைத் தேவன் குருடாக்கினதாக கூறவில்லையா?“ என்றேன். அவர், “ஓ, சகோ. பிரான்ஹாமே. நான் அப்படி நினைக்கவில்லை” என்றார். பார்த்தீர்களா? 102பாருங்கள், நாம் முடிவில் இருக்கிறோம். மாம்சப் பிரகாரமான உலகம், மாம்சப் பிரகாரமானசபை முடிவுக்கு வந்துள்ளது. அது எப்படி சபைகளின் சங்கத்தில் முடிவடைகிறதென்று கவனியுங்கள். ஐக்கிய சகோதரர்கள் அதில் சேர்ந்து கொண்டனர், பெந்தெகொஸ்தேயினர் அதில் சோந்து கொண்டனர். மற்றவர் அனைவருமே தங்களுக்கு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். பாருங்கள், அவர்கள் கானானியர் மத்தியில், ஏசாவின் ஆவியை கொண்டவர்களாய், மிகவும் பயபக்தியுள்ளவர்களாய், உலகத்துடன் சங்கம் உண்டாக்கிக் கொண்டு. ஆவிக்குரிய பிரகாரம் புரிந்து கொள்ளாமல், ஜெயங் கொள்ளாதவர்களாய், வெளியே அழைக்கப்பட்டு பிரிக்கப்படுவதற்கென்று தேவனால் தெரிந்து கொள்ளப்படாதவர்களாய் இருக்கின்றனர். இதை மாத்திரம் நான் எப்படியாவது புரிந்து கொள்ளும்படி செய்ய முடியுமானால், எந்த வழியிலாவது என்னால் ஆழமாகப் பதியச் செய்ய முடியுமானால்! அவர்களால் அதை காண முடியவில்லை. அவர்களுக்கு கண்களிருந்தும் காணாமலும், காதுகளிருந்தும் கேளாமலும் இருக்கின்றனர். நாம் ஏன் ஆவியில் இவ்வளவு மந்தமுள்ளவர்களாயிருக்கிறோம்? இதைக் கவனியுங்கள். எல்லாமே முடிவுக்கு வந்துள்ளது. 103ஆவிக்குரிய சபையும் முடிவுக்கு வந்துள்ளது. அது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஓ தேவனே! அவள் ஆவிக்குரிய பிரகாரமாய் லூத்தரில் துவங்கினதை பின் நோக்கிப் பாருங்கள். அதன் பிறகு வெஸ்லியின் மூலம் அவள் பரிசுத்தமாக்கப்படுதலை அடைந்தாள். பெந்தெகொஸ்தேயினரின் காலத்தில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம். இப்பொழுது முடிவுகாலத்தில் கிறிஸ்துவின் ஆவி சபையில் இருந்து கொண்டு, அவர் செய்த கிரியைகளையே செய்து, மறுபடியும் அதன் தலைக்கு சென்றுவிட்டது. இப்பொழுது கிறிஸ்துவும் சபையும் இணைய ஆயத்தமாகி, கர்த்தராகிய இயேசுவின் வருகையையும் மரித்தோரின் உயிர்த்தெழுதலையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். ''சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்'' என்று இயேசு கூறினார். உங்களுக்குப் புரிகிறதா? 104மாமிசப்பிரகாரமான சபையைப் பாருங்கள். அவர்கள் தூரம் தூரம் விலகி எங்கே சென்று கொண்டிருக்கின்றனர் என்று. ஆவியில் நிறைந்த சபை, அதன் சிறு அர்த்தமற்ற காரியங்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, ஆவியில் முன்னேறி (அது சிறுபான்மையோரே), பரிசுத்த ஆவி அதன் மூலம் கிரியை செய்யும் நிலையை அடைந்து, அதன் ஆண்டவரை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருப்பதை பாருங்கள். மற்றவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, உலகத்துக்கு திரும்பிச் சென்று, தங்களுக்கென ஒரு பிரிவு ஏற்படுத்திக் கொண்டு, கத்தோலிக்க மார்க்கத்தின் தலைமையின் கீழ் சபைகளின் சங்கத்தை சேர்ந்து மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கி விட்டனர். ஒரு சொரூபம், அப்படி ஏதோ ஒன்று. சபைகளின் சங்கமும் கத்தோலிக்க மார்க்கமும் ஒன்றாக இணைந்து, ஒன்றாக செயல்படுகின்றன. “மிருகத்தினோடே அல்லது அதன் சொரூபத்தோடே யுத்தம் பண்ணத்தக்கவன் யார்?'' நிச்சயமாக முடியாது. அதன் பேரில் நாம் மணிக்கணக்காக பேச முடியும். 105இதை உங்களிடம் கூற விரும்புகிறேன். அதன் பிறகு நான் முடித்து விடுகிறேன். அது நான்.... அது நீண்டதாயிருக்கும் என்று ஏற்கனவே கூறினேன். எனக்கு இறுக்கமான உணர்வு உள்ளது. தேவன் இவைகளை என்னிடம் கூறிவிட்டு, “இவைகளை அவர்களுக்கு எடுத்துக்கூறு! வாயை திறந்து பேசு! இனி அமைதியாயிருக்காதே! அவர்களுக்கு இதைக்காண்பி. அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், இரத்தப் பழி உன் கரங்களில் இல்லை” என்று கூறினார். அந்த நேரம் இப்பொழுது இங்குள்ளது. காலம் அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலகம் அதன் முடிவுக்கு வந்துள்ளது. அதனால் இன்னும் பொறுத்துக் கொள்ள முடியாது. போர் அதன் முடிவுக்கு வந்துள்ளது. இனி போரே இருக்க முடியாது. போர் இருக்குமானால், முதலில் நெம்புகோளை யார் இழுத்துவிட்டாலும் அது போதும். அரசியல் அழுகிப் போய் ஊழலடைந்த நிலையில் உள்ளது. 106சபை உலகம் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தேயினர் போன்றவர்களைக் கொண்டுள்ளது. அது பன்றி சேற்றிலே புரளவும், நாய் தான் கக்கினதைத் தின்னவும் திரும்பிச் சென்றதைப் போல் உள்ளது. அது உண்மை, அவர்கள் ஒவ்வொருவரும்! அந்த பாழான இடத்திலிருந்து தேவன் தெரிந்து கொள்ளப்பட்ட சபையை வெளியே அழைக்கிறார். அதுமுற்றிலும் உண்மை . ஏசாவின் குழுவினர், “நாங்கள் தான் சபை'' என்கின்றனர். அதை நான் சந்தேகிக்கவில்லை. யாக்கோபு ஏசாவின் தகப்பனும் கூட, அது உண்மை... மன்னிக்கவும், ஈசாக்கு ஏசாவின் தகப்பன், யாக்கோபு அவன் சகோதரன். ஒருவனுக்கு சேஷ்ட புத்திர பாகத்தின் மேல் வாஞ்சை இருந்தது. மற்றவன் அதை வெறுத்தான். ஒருவன் கேட்டு, அடையாளம் கண்டு கொண்டு, அதன்படி நடந்தான். மற்றவனோ, நான் சபைக்கு சென்று நல்ல காரியங்களைச் செய்யும் வரைக்கும், என்ன வித்தியாசம்?” என்றான். பார்த்தீர்களா?இப்பொழுது இந்த... 107முடிக்கும் தருணத்தில் இதைக் கூற விரும்புகிறேன். உண்மையான சபை வாழ்வதற்கு எவ்வளவோ அதிக காரியங்கள் உள்ளன. ஓ, உண்மையான சபைக்கு, தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு, இதுமிகவும் மகிழ்ச்சிகரமான நேரமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் இருதயத்தில் நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்து விட்டீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையை கவனித்துக் கொண்டு வந்து, உலகத்தின் காரியங்கள் உங்களை விட்டு எடுபடுவதை நீங்கள் காணும்போது, நீங்கள் புது சிருஷ்டியாகின்றீர்கள். முடிக்கும் தருணத்தில் இதை கூர்ந்து கவனிக்கவும். நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்து விட்டீர்கள் என்பதை உங்கள் வாழ்க்கை நிரூபிக்கிறது. “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். உங்கள் முழு குறிக்கோளுமே கிறிஸ்துவே. அவர் வருவதற்கு நீங்கள் எந்த நிமிடத்திலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆவியில் நடந்து அவரிடத்தில் அன்பு கூருகிறீர்கள். அவர் உங்கள் மூலம் கிரியை செய்வதை நீங்கள் காண்கிறீர்கள். உங்களுக்கு எதையும் செய்ய வேண்டுமெனும் விருப்பம் இல்லை, அவரே அதை செய்கிறார். ஓ, என்ன நேரம்! 108ஒரு இளைஞன் ஒவியக்கலையை பயின்று, ஓவியனாக ரோமாபுரிக்கு சென்றது என் நினைவுக்கு வருகிறது. அவன் ஒவியக் கலையை அங்கு பயிலச் சென்ற மற்ற அமெரிக்க பையன்களையும், பெண்களையும் காட்டிலும், உலகிலுள்ள “மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாயிருந்தான். இந்த இளைஞன் தலை சிறந்தவனாயிருந்தான். அவன் மிகவும் நல்லவன். அவர்கள் கவனித்து வந்தனர். அவர்கள் பெரிய விருந்துகள் வைத்து குடித்து வெறித்தனர். அவர்கள் ரோமாபுரியில் எப்படி செய்வார்களென்று உங்களுக்குத் தெரியும். நானே அங்கு சென்று பார்த்திருக்கிறேன். ஆண்களும், பெண்களும் தெருக்களிலேயே அவலட்சணமாய் நடந்து கொள்வார்கள். பூங்காக்களில் அவர்கள் பகிரங்கமாக உடலுறவு கொண்டு அதைக்குறித்து கவலைப்படுவதேயில்லை. இங்கிலாந்திலும் கூட, இன்னும் மற்ற நாடுகளிலும் அப்படித் தான். பாருங்கள்? இங்கு நடப்பதை விட அங்கு அதிக மோசமாக ஒன்றும் நடக்கவில்லை. இங்கும் அதே விதமாகத்தான் மோசமாக நடக்கிறது. ஆனால், காவல் படையினரின் நிமித்தம் அது அவ்வளவு பகிரங்கமாக நடக்காமல், சற்று தலைமறைவாக நடக்கிறது. ஆனால், அதேபோன்ற அவலட்சணமான செயல்கள். 109இந்த இளைஞன் இப்படிப்பட்ட விவகாரங்களில் கலந்து கொள்ளாமல் தனியேயிருந்தான். அவர்கள் மது அருந்தும் விருந்துகளுக்கு செல்லும் போது. அவர்களைப் போகவிட்டு, இவன் ஓவியக்கலையை பயின்று வந்தான். ஒரு நாள் அந்த ஓவியக் கூடத்தின் வயோதிப கண்காணிப்பாளன் - கிறிஸ்தவன் - அவனை அணுகி, “மகனே, நாம் சிறிது தூரம் நடப்போம். எனக்கு உன்னிடம் சிறிது நேரம் பேச வேண்டும் என்றான். இளைஞனும், “சரி” என்று தலையசைத்தான். அவர்கள் இருவரும் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு மலையின் மேல் நடந்து சென்றனர். சூரியன் அப்பொழுது அஸ்தமித்துக் கொண்டிருந்தது. இந்த வயோதிபன் அந்த இளம் ஓவியனைப் பார்த்து “மகனே, நீ அமெரிக்கனா? என்று கேட்டான். அவன், “ஆம்” என்றான். கண்காணிப்பாளன், நீ ஒவியம் பயில இங்கு வந்திருக்கிறாய். உன் வாழ்க்கையில் ஒவியத் தொழிலைச் செய்ய எண்ணம் கொண்டிருக்கிறாய் என்று நினைக்கிறேன்“ என்றான். அவன், “ஐயா, அதை செய்யத்தான் நான் திட்டமிட்டிருக்கிறேன்” என்றான். கண்காணிப்பாளன், ''நீ ஒரு கிறிஸ்தவன் என்று நினைக்கிறேன்“ என்றான். அவன், “நான் ஒரு கிறிஸ்தவன் தான்” என்றான். கண்காணிப்பாளன், “உன்னை ஓன்று கேட்க விரும்புகிறேன். மற்றவர்களிடமும் இதைக் கேட்டிருக்கிறேன். அவர்களும் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். நீ அமெரிக்காவிலிருந்து வந்துள்ள மற்ற பையன்களையும், பெண்களையும் காட்டிலும் இவ்வளவு வித்தியாசமாயிருக்கக் காரணமென்ன? நீங்கள் அனைவருமே உங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிறீர்களே” என்று கேட்டான். அவன், “ஐயா, சூரியன் அஸ்தமிக்கும் திசையைக் கண்டீர்களா? என்று கேட்டான். கண்காணிப்பாளன், “ஆம்” என்றான். இளைஞன், ''கடலைத் தாண்டி மறுபக்கத்தில் நியூ இங்கிலாந்து என்னும் நாட்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட பட்டணத்தில், அந்த பட்டணத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில் ஒரு குறிப்பிட்ட பெண் வசிக்கிறாள். அவளுக்கு நான் உண்மையாய் வாழ்வேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறேன். எனவே என் ஒவியப் படிப்பை முடித்துக் கொண்டு, எனக்கு உண்மையாய் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பெண்ணிடம் திரும்பிச் செல்ல வேண்டும் என்னும் ஒரே எண்ணம் என் மனதில் உள்ளது. ''ஆகையால் தான், இவ்விதம் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்'' என்றான். ஓ சகோதரனே, சகோதரியே, அவர்கள் நம்மை என்ன சொல்லி அழைத்தாலும் நாம் ஏன் கவலைப்படுவதில்லையென்று நீங்கள் வியக்கலாம். அவர்கள் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. 110அன்றொரு நாள் நான் ஃபிரட்டுடன் போர்டோ ரிக்கோவிலுள்ள சான் ஜூவானில் நின்று கொண்டு, கடலை நோக்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பவளக் குன்றுகள் எப்படி அரை மைல் தொலைவில் கடலுக்குள் இருந்ததென்றும், அலைகள் அதன் மேல் மோதுவதையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார்... ஃபிளமிங்கோ பறவைகள் பூங்காவில் ஒய்யாரமாக நடந்து கொண்டிருந்தன. நான் சொன்னேன்... “சகோ. பிரான்ஹாமே இது பரலோகம் போல் உள்ளது” என்று ஃபிரட் சொன்னார். அதற்கு நான், ''சகோதரனே, அங்கு கடல் அமைதியாய் இருக்கும். கடலுக்கு அப்பால் பரலோகம் என்னும் குறிப்பிட்ட ஸ்தலம் உள்ளது. இயேசு என்றழைக்கப்படும் குறிப்பிட்ட ஒருவர் அந்த பரலோகத்தில் இருக்கிறார். ஒரு நாள் அவர் என் பாவங்கள் அனைத்தும் போக்கினார். அவருக்கு நான் உண்மையாய் வாழ வேண்டும் என்றும் அவர் செய்யக் கூறினதை நான் செய்வேன் என்றும் அவருக்கு வாக்கு கொடுத்தேன். ஆகையால் தான் அவருடைய சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படுவதில்லை. இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது“ என்றேன். அது தான் ஒரு கிறிஸ்தவனை வித்தியாசமாக வாழும்படி செய்கிறது. அவன் வித்தியாசமாக வாழ அவனிடம் எதோ உள்ளது. 111நாம் சற்று நேரம் தலை வணங்குவோம். இக்காலை வேளையில் சோர்ந்து போயிருக்கும் நண்பனே, நீ வித்தியாசமாக வாழ்வதற்கு உன்னிடம் ஏதாவது உள்ளதா? உன்னை உலகத்திலிருந்து வெளியே கொண்டு வர, உலகத்தைக் காட்டிலும் முக்கியம் வாய்ந்த கிறிஸ்துவுக்காக வாழ ஏதாகிலும் உன்னிடம் உள்ளதா? அதை நீ பெறாமலிருந்தால், அதை ஏன் இப்பொழுது பெற்றுக் கொள்ளக் கூடாது? நீ சபைக்கு சென்று, நான் நல்லவனாக இருக்க விரும்புகிறேன்“ என்று சொல்வதில் திருப்தியடையாதே. அப்படி செய்யாதே. நீ கிறிஸ்தவனாயிருக்க விரும்ப வேண்டும். உன் இருதயத்தில் எப்பொழுதும் ஏதோ ஒன்று, ''நீ தவறாயிருக்கிறாய். நீ சரியாயிருக்க விரும்புகிறேன்” என்று கூறுமானால், நீ இப்பொழுது இல்லாத ஒன்றாக இருக்க வாஞ்சை கொண்டால், தேவன் உன்னை அழைக்கிறார் என்று அறிவதில்லையா? அந்த அழைப்புக்கு புறமுதுகு காட்டாதே. நீ ஒருதரம் பிரகாசித்து உனக்குத் தருணம் அளிக்கப்பட்டு அதை நீ புறக்கணிப்பாயானால், அது கடைசி முறையாக இருக்கும். பாவத்துக்காக செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராது. நீ ஏசாவுடன் சேர்ந்து கொள்ளாதே. நீ என்ன கிரயம் செலுத்த நேரிட்டாலும், யாக்கோபுடன் சோந்துகொள். உன் வீட்டை இழக்க நேரிட்டாலும், உன் வேலையை இழக்க நேரிட்டாலும், உன் கணவனை இழக்க நேரிட்டாலும், உன் மனைவியை இழக்க நேரிட்டாலும், உன் பிள்ளைகளை இழக்க நேரிட்டாலும், அதற்கான கிரயம் எதுவானாலும், சேஷ்டபுத்திரபாகத்தைப் பெற்றுக்கொள். அது தான் முக்கியம் வாய்ந்தது. இன்று காலை அதை பெற வேண்டுமென்ற உணர்ச்சி உனக்கு ஏற்பட்டால், இந்த சேஷ்டபுத்திரபாகத்தை நீ பெற்றுக் கொள்ள விரும்பினால், அதை நான் உனக்கு அளிக்க முடியாது. தேவனால் தான் முடியும். அவர் தான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். உங்கள் கைகளையுயர்த்தி, “சகோ. பிரான்ஹாமே. எனக்காக ஜெபியுங்கள். எனக்கு அந்த சேஷ்டபுத்திரபாகம் வேண்டும்” என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, எல்லாவிடங்களிலும். “எனக்கு அந்த சேஷ்டபுத்திரபாகம் வேண்டும்.” 112எங்கள் பரலோகப் பிதாவே, மிகவும் கண்ணியமும், பரிசுத்தமுள்ள தேவனே, நீர் மனித குமாரருக்கும் குமாரத்திகளுக்கும் காண்பிக்கின்ற உமது எல்லா நன்மைகளுக்காகவும், இரக்கங்களுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நாங்கள் முடிவு காலத்தில் இருக்கிறோம் என்பதை உணருகிறோம். வேறொன்றும் இனி அதிக காலம் நீடிக்காது. நாங்கள் கிருபையாக நீட்டப்பட்ட காலத்தில் காத்துக் கொண்டிருக்கிறோம். ''நோவாவின் காலத்தில் பேழை ஆயத்தம் பண்ணப்பட்ட நேரத்தில் தேவனுடைய நீடிய பொறுமை இருந்து. முடிவில் எட்டு பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர். மனுஷகுமாரன் வருகையிலும் அப்படியே இருக்கும்“ என்று நீர் சொன்னீர். ”யாரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும்மென்று விரும்பி, தேவன் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். (2.பேது.3:9). இன்றைக்கு இந்த கட்டிடத்தில் மனிதர்களும் ஸ்திரீகளும், பையன்களும், பெண்களும், வாலிபரும், வயோதிபரும் தங்கள் கரங்களையுயர்த்தி, “ஏதோ ஒன்று என்னை இழுக்கிறது'' என்றனர். ஓ தேவனே, அவர்கள் அதைப் புறக்கணிக்காதிருப்பார்களாக. அவர்கள் தங்கள் கல்வியை விற்கட்டும், அவர்களுக்குள்ள எல்லாவற்றையும் விற்கட்டும். விலைமதிக்க முடியாத முத்தைக் கண்ட அந்த மனிதனைப் போல். அவன் தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று இந்த விசேஷமான மகத்தான முத்தைக் கொண்டான். இவர்கள் இன்று காலையில், உலகில் தங்களுக்குண்டான எல்லாவற்றையும், உலகில் தங்களுக்குண்டான செல்வாக்கையும் விற்பார்களாக. 113கர்த்தாவே, இங்கு உட்கார்ந்திருக்கும் இந்த பெண்கள், அநேகந்தரம் தங்களுக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதைக் கேட்டும் கூட, இன்னும் அவர்கள் உலகத்தில் உழன்று உலகத்தோடு வாழ்ந்து. உலகத்தின் நாகரீகத்தை அனுசரித்து உடை உடுத்தும் விருந்துகளுக்கு சென்று, உலக காரியங்களில் பங்கு கொண்டு, உலகத்தைப் போல் நடந்து கொண்டு, உலகத்தின் காரியங்களை உபயோகிக்கின்றனர். ஓ தேவனே, இன்று காலையில் அவர்கள் வெட்கப்படுவார்களாக! அவர்களுக்கு நம்பிக்கை ஏதாகிலும் இருக்குமானால், கர்த்தாவே, இன்று அவர்கள் மேல் காண்பிப்பீராக. அது இந்த நேரமாக இருக்கட்டும். இங்குள்ள மனிதர் கர்த்தாவே, ஓ தேவனே, இவர்கள் மேல் இரக்கமாயிரும். இவர்களில் அநேகர் இன்னும் உலகத்தின் காரியங்களில் நடந்து கொண்டு, உலகத்தின் காரியங்களை வாஞ்சித்து அனுபவித்து, பாவத்தில் உழன்று. புகை பிடித்து, குடித்து, சமுதாய மது அருந்தி, அந்த பக்கத்தில் சிறிது பீர் குடித்து, அப்படி ஏதாவதொன்றைச் செய்து இச்சித்து, அவலட்சணமாக உடுத்தியுள்ள அரை நிர்வாணப் பெண்களின் படங்களைத் தொங்கவிட்டுள்ளனர். தெருக்களில் போகும் (கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும்) இந்த பெண்களை இவர்கள் இச்சையோடு பார்த்து, மற்றவர்கள் மேல் ஏறக்குறைய காரை மோதும் நிலைக்கும் கூட வந்து விடுகின்றனர். அந்த பெண்ணின் உடல் இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் கல்லறைக்குள் அழுகி, அழகான உருவம் கொண்ட அந்த உடலின் வழியாக பூச்சிகளும் கிருமிகளும் நெளிய வாய்ப்புண்டு என்றும், அவள் வாழ்ந்த வாழ்க்கையின் நிமித்தம் அவளுடைய ஆத்துமா பிசாசின் நரகத்தில் இருக்க வாய்ப்புண்டு என்றும் அறியாமலிருக்கிறாள். இருப்பினும் அவள் வர்ணம் தீட்டப்பட்ட தன் உதடுகளை அசைத்து உங்களை பார்த்து கேலி செய்கிறாள். 114தேவனே, இந்த ஜனங்களின் மேல் இரக்கமாயிரும். ஓ கர்த்தாவே, அவர்கள் இழந்து போகவிடாதேயும். தயவு செய்து இரக்கமாயிருந்து இரக்கத்தை அனுப்புவீராக. கர்த்தாவே, அவர்கள் ஒவ்வொருவருக்கும் அதை அளியும். நீர் ஒருவர் மாத்திரமே இந்த ஆசீர்வாதத்தை அருளமுடியும். நீர் அவர்களை நித்திய ஜீவனுக்கென்று அழைத்திருந்தால், அவர்களுடைய இருதயங்கள் திறக்கப்படுவதாக அவர்கள் இக்காலையில் எல்லாவற்றையும் தள்ளிவிட்டு, அதை ஏற்றுக் கொள்ளட்டும். பிதாவே, இதை அருளும். இப்பொழுது வியாதியாயுள்ளவர்களுக்காகவும், அவதியுறுவோருக்காகவும் பரிசுத்த ஆவியானவர் இந்த கூட்டத்துக்குள் வருவாராக. இன்று காலையில் வருகையைக் குறித்தும் மற்றவைகளைக் குறித்தும் பேசப்பட்ட செய்தி உண்மையென்றும், இயேசு சபையில் கிரியை செய்வது உட்பட எல்லாமே முடிவுக்கு வந்துள்ளது என்றும் ஜனங்கள் அறிந்து கொள்வார்களாக. கர்த்தாவே அதை இப்பொழுதே நிறைவேறப் பண்ணி, இந்த ஜனங்களை உம்முடைய கரங்களில் அரவணைத்துக் கொள்வீராக. பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் மத்தியில் அசைவாடி கிரியை செய்வதை இவர்கள் காணும் போது, நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம் என்று நான் பிரசங்கித்த செய்தி உறுதிப்படுவதாக. அவர்கள் அதற்கு செவி கொடுப்பார்களாக. அவர்கள் அதைக்கேட்டனர். அதே இயேசு அவருடைய காலத்தில் செய்தவைகளை இந்தக் கடைசி நாட்களில் அவருடைய சபையின் மூலம் நடப்பித்து வருகிறார் என்பதை இவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாக. அவர்கள் தங்கள் வாழ்க்கையையும், சரீரங்களையும், ஆத்துமாக்களையும், ஆவிகளையும் உமக்கு அர்ப்பணித்து செயல்படுவார்களாக. கர்த்தாவே, இவர்களை உமது கரங்களில் தருகிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென். 115ஜனங்கள் உள்ள இந்தக் கட்டிடத்தில், ஜெப அட்டைகளை விநியோகிக்க இன்று காலை பில்லியை அனுப்பினேன்... (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி). நீ வியாதிப்பட்டு தேவையுள்ளவளாயிருக்கிறாயா? கிணற்றண்டையிலிருந்த அந்த ஸ்திரீக்கு, அவர் செய்தது போல், உன் கோளாறு என்னவென்றும், எனக்குத் தெரியாதென்று நீ அறிந்துள்ள உன்னைக் குறித்து ஏதாவதொன்றை தேவன் எனக்கு வெளிப்படுத்தித் தருவாரானால், தேவனை விசுவாசிக்கத்தக்கதாக அது தேவன் பேரில் உனக்கு விசுவாசத்தை உண்டாக்குமா? மற்றவர்களுக்கும் அது விசுவாசத்தை உண்டாக்குமா? நாம் முதன்முறை சந்திக்கிறோமா? (ஸ்திரீ, இல்லையென்கிறாள் - ஆசி). சரி, நீ என்னை முன்பு கண்டிருக்கிறாய். ஆனால் நான் உனக்கு அந்நியன், அப்படித்தானே? சரி, தேவனாகிய கர்த்தர் தாமே உன் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளுவாராக. இது உண்மையா இல்லையா? ஓ, அறிவு நிறைந்த உங்கள் மதத்தை நோக்கிக் கூப்பிடுங்கள். 116கர்மேல் பர்வதத்தின் மேல் எலியா, ''பாகால் எங்கே? அவன் எங்கே? அவனை எழுப்புங்கள்'' என்றான். நீங்கள் இயேசுவை எழுப்ப வேண்டிய அவசியமில்லை. அவர் எல்லா நேரத்திலும் விழித்துக் கொண்டிருக்கிறார். அவர் என்றும் பிரசன்னராய். என்றும் ஜீவிக்கிறவராய், என்றும் வல்லவராய், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். ஆமென். தேவன் தேவனாகவே இருந்து வருகிறார். உன் இருதய வியாதி உன்னை விட்டகன்று நீ சுகம் பெறுவாய் என்று விசுவாசிக்கிறாயா? நீ இந்த இடத்தைச் சேர்ந்தவள் அல்ல. நீ லெக்ஸிங்டனுக்கு திரும்பிச் சென்று அங்குள்ள ஜனங்களிடம் கர்த்தர் உனக்குச் செய்த மகத்தான காரியங்களை எடுத்துச் சொல். 117அது ஜனங்களின் தலைக்கு மேலே சென்று விடுகிறது. அவர்கள் அதை புரிந்து கொள்வதில்லை. ஆனால், உயிருள்ள சபையோ அதை வேகமாக கிரகித்துக் கொள்ளும். பரிசுத்த ஆவியின் பிரசன்னம் இங்குள்ளதை அது அறிந்திருக்கிறது. பின்னால் உள்ள யாரோ ஒருத்தி கையுயர்த்தினாள். அது நீயா, ஸ்திரீயே? உனக்குள்ள கோளாறு என்னவென்று தேவன் என்னிடம் கூற முடியுமென்று விசுவாசிக்கிறாயா? அந்த பழைய... அந்த மூலையில் உள்ள சகோதரன் சற்று முன்பு ஏதோ கூறினார் என்று நினைக்கிறேன். சகோதரனே, நீ விசுவாசிக்கிறாயா? உன் சரும வியாதி உன்னை விட்டு நீங்குமென்றும் நீ சுகமடைவாய் என்றும் விசுவாசிக்கிறாயா? அதை நீ ஏற்றுக்கொண்டால், உன் கையையுயர்த்து. சரி. அவர் எனக்கு அந்நியர். பாட், அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 118ஜெபித்துக் கொண்டிருக்கிற அந்த ஸ்திரீ என்னை நோக்கி, என்னை அவளுக்குத் தெரியாது என்று சொன்னாள். அந்த உயர்ந்த இரத்த அழுத்தம் உன்னை விட்டு நீங்கும் என்று விசுவாசிக்கிறாயா? அது உண்மை, அல்லவா? அது உண்மையானால் உன் கையையுயர்த்து. சரி, தேவனிடத்தில் விசுவாசமாயிரு. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? என்னைத் தெரிந்த உங்களில் சிலரைக் குறித்தென்ன? உங்கள் இருதயத்தில் ஏதாவது இருக்கக்கூடும். அப்படியானால் உங்கள் கைகளையுயர்த்துங்கள். பாருங்கள், எத்தனையோ பேர். அத்தனை பேருக்கும் என்னால் முடியாது. அது எப்படியாவது வர வேண்டும். அது உங்கள் விசுவாசம். ஜார்ஜி ப்ரூஸ் இங்கு உட்கார்ந்திருப்பதைக் காண்கிறேன். ஜார்ஜி, நீ எப்பொழுதும் யாருக்காகிலும் ஏதாவதொன்றை கண்டு பிடிக்க முயன்று கொண்டிருக்கிறாய். நீ புற்றுநோயிலிருந்து சுகம் பெற்றாய். அதைக் குறித்து எந்த சந்தேகமும் உன் மனதில் இல்லை. நீ இந்த கூடாரத்துக்குள் வந்து வெளியே சென்ற அந்த நாளில் பரிசுத்த ஆவியானவர் என் மேல் இறங்கி நீ புரிந்த ஒரு செயலைக் கூறினார். அதைக் குறித்து நீயும் தேவனும் வேறொரு நபரும் மாத்திரம் அறிந்திருந்தீர்கள். அது சரியா? அது சரியா? அது சரி. ஜார்ஜி, என்னை நீ நம்புகிறாய் அல்லவா? ஜார்ஜி, உன் இருதயத்தில் ஏதோ ஒன்றுள்ளது. உன் இருதயத்தில் உள்ளதை தேவன் எனக்கு வெளிப்படுத்த முடியுமென்று விசுவாசிக்கிறாயா? என்னை அறிந்துள்ள மற்றவர்களாகிய உங்களை, அது விசுவாசிக்கச் செய்யுமா? 119ஜார்ஜி ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். தூரத்திலுள்ள இருவருக்காக அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவர்கள் இருவரும் காரிடானில் வசிக்கின்றனர். அது உண்மை. அதுவுமில்லாமல் இங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவருக்காக அவள் ஜெபம் செய்து கொண்டிருக்கிறாள். ''அவர் சுகம் பெற வேண்டுமென்று அவள் அவ்வளவாக ஜெபம் செய்யாமல், அவருடைய ஆத்துமா இரட்சிப்புக்காக ஜெபம் செய்து கொண்டிருக்கிறாள். அது கர்த்தர் உரைக்கிறதாவது.'' அது உண்மை. ஜார்ஜி, அது உண்மையா? அது முற்றிலும் உண்மை. பின்னால் உள்ள ஒருவர் கையையுர்த்தினார். மிகவும் பின்னால் உள்ள ஒருவர். உங்களைக் குறித்தென்ன? நீங்கள் கையுயர்த்தினீர்களா? நீங்கள் எனக்கு அந்நியர் அல்லவா? இங்கு உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருப்பவரே, உங்களை எனக்குத் தெரியாது. நான் தேவனுடைய தீர்க்கதரிசி, தேவனுடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறீர்களா? நான் கூறினது சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் போய் தேவனிடம் கேளுங்கள். அது ஒன்றை மாத்திரமே நீங்கள் செய்ய முடியும். ஏனெனில், நீங்கள் புற்று நோயினால் அவதியுறுகிறீர்கள். அது உண்மை. நீங்கள் இந்த நகரத்தை சேர்ந்தவர் அல்ல. நீங்கள் நியூ ஆல்பனியிலிருந்து வருகிறீர்கள். அது உண்மை. உங்களுக்கு புற்று நோய் உள்ளது. நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் குணமடைவீர்கள். அதை ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் கையையுயர்த்துங்கள். கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக! 120வெள்ளை தொப்பி அணிந்திருக்கும் அந்த கறுப்பு நிற ஸ்திரீ கையை உயர்த்தினாள் என்று நினைக்கிறேன். சரி. கறுப்பு நிற நபர் இதுவரைக்கும் வரவில்லை. ஸ்திரீயே, நீ விசுவாசிக்கிறாயா? சரி, உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. உனக்கு இருதய வியாதி, வயிற்றுக் கோளாறு, எல்லா சிக்கல்களும் உள்ளன. யாரோ ஒருவர் உன்னை இங்கு கொண்டு வந்தார். அது கர்த்தர் உரைக்கிறதாவது. அது உண்மை, இல்லையா ஸ்திரீயே? அது உண்மையானால், உன் கையிலுள்ள கைக்குட்டையை இப்படி ஆட்டு. ஜனங்கள் அதைக் காணட்டும். அந்த ஸ்திரீயை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. உன் கையை உயர்த்தினாயா? நான் உனக்கு அந்நியனா? நீயும் எனக்கு அந்நியன். தேவன் என்னை அறிந்திருக்கிறார், உன்னை அறிந்திருக்கிறார் என்று விசுவாசிக்கிறாயா? உன் இருதயத்திலுள்ளதை தேவன் என்னிடம் கூற முடியுமென்று விசுவாசிக்கிறாயா? நீ யாரோ ஒருவருக்காக ஜெபம் செய்து கொண்டிருக்கிறாய். அது உன் தந்தை. அவருக்கு இருதய வியாதி உள்ளது. அது உண்மை. நீ பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நாடிக் கொண்டிருக்கிறாய். அது கர்த்தர் உரைக்கிறதாவது. நீ மாத்திரம் விசுவாசித்தால்! இப்படி கையையுயர்த்தியுள்ள இந்த ஸ்திரீயைக் குறித்து என்ன? நீ விசுவாசிக்கிறாயா? உனக்குள்ள கோளாறு உன் கையிலுள்ள சொறியாகும். ஆனால் நீ உன் பேரப் பிள்ளைக்காக ஜெபம் செய்து கொண்டிருக்கிறாய். அது சரியான நிலையில் இல்லை. அது உண்மை. இல்லையா ஸ்திரீயே? உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? நான் பிள்ளை என்று சொன்னேன். ஒரு நிமிடம் பொறு. ஒ, பார்த்தாயா? உன் மகனுக்கு கார் விபத்து ஏற்பட்டு அவன் ஊனமுற்றிருக்கிறான். ஸ்திரீயே, உன்னை எனக்குத் தெரியாது. அது உண்மை. அது உண்மையானால், உன் கையையுயர்த்து. 121இங்கு யார் உள்ளது? அது யார்? அது நானல்ல. அதை எப்படி என்னால் செய்ய முடியும்?ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து மரத்துப் போகாமலிருங்கள். தேவன் இங்கிருக்கிறார்! நீங்கள் பெற விரும்பும் அந்த பரிசுத்த ஆவி. இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? சரி, அப்படியானால் இப்பொழுதே அதை பெற்றுக் கொள்ளுங்கள். அதை பெற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இதுவே. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். வியாதியாயுள்ள அல்லது தேவையுள்ள நீங்கள் நான் சுகப்படுத்த முடியாது. எந்த மனிதனும் சுகப்படுத்த முடியாது. நான் பரிசுத்த ஆவியைத் தர முடியாது. ஆனால், சுகமளித்து பரிசுத்த ஆவியைத் தரக் கூடியவர் இங்கிருக்கிறார். அவர் தான் இதை செய்கிறார். 122இப்பொழுது தலை வணங்குங்கள். நான் உங்களுக்காகவும் இந்த உறுமால்களுக்காகவும் ஜெபம் பண்ணும் போது, நீங்கள் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எங்கள் பரலோகப் பிதாவே. எனக்குத் தெரிந்த வரையில், எனக்கு அந்நியராயிருந்த ஒவ்வொருவருடனும் தொடர்பு கொண்டு, நான் பலவீனமாகவும், களைப்படையும் வரைக்கும் இதை செய்தேன். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் இந்த நேரத்தைக் கண்டு கொண்டனர் என்று உணர ஏவப்பட்டேன். அழைக்கப்பட உமது ஆவியால் அனுமதிக்கப்பட்ட இவர்கள் ஒவ்வொருவரும், கர்த்தாவே, அவர்களில் சிலருக்கு அவர்கள் நினைத்திருந்ததைக் காட்டிலும் அதிக விசுவாசம் இருந்தது. இப்பொழுது தான் அவர்கள் இருதயத்தில் தொடங்கியிருக்கின்றனர். ஒருசமயம் ஒரு ஸ்திரீ அவர் கடந்து சென்ற போது அவருடைய வஸ்திரத்தை தொட்டாள். அப்பொழுது அவர், ''என்னைத் தொட்டது யார்?'' என்று கேட்டார். அவர்கள், ''எல்லோருமே உம்மைத் தொட்டார்கள்'' என்றனர். அவர், ''நான் பலவீனமடைந்ததை உணருகிறேன்'' என்றார். அந்த ஸ்திரீயை அவர் கண்டு பிடித்து அவளுக்கு பெரும்பாடு இருந்ததென்றும் அவளுடைய விசுவாசம் அவளைக் குணப்படுத்தினது என்றும் கூறினார். நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராய் அவர் இன்னும் இருக்கிறார், என்று வேதம் உரைக்கிறது. மேலும் அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், என்றும் அது உரைக்கிறது. அவர் மாறாதவராக அதே பிரதான ஆசாரியராயிருப்பாரானால், அவர் அதே கிரியைகளை இன்றும் செய்வார். 123ஆவியினால் நிறைந்த சபை தலைமை கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை ஜனங்கள் காண்பார்களாக. கிறிஸ்து வந்து தமது சபையை எடுத்துக் கொண்டு செல்ல ஆயத்தமாயிருக்கிறார். சோதோமின் நாட்களில் இருந்தது போல அவருடைய கடைசி மகத்தான அடையாளங்கள், அவர் சாராளை அறிந்திருந்தார். ஆபிரகாமுக்கு சாராள் என்னும் பெயர் கொண்ட ஒரு மனைவி இருந்ததை அவர் அறிந்திருந்தார். அவள் கூடாரத்தில் இருந்து கொண்டு நகைத்ததை அறிந்து கொண்டார். அவர், ''அதுவே அடையாளமாயிருக்கும். அதை நீங்கள் காணும் போது. இவை யாவும் நிறைவேறித் தீருமளவும், இந்த சந்ததி ஒழிந்து போகாதென்று நினைவில் கொள்ளுங்கள்'' என்றார். இதோ அது. நாம் முடிவில் இருக்கிறோம். இங்கு வியாதியாயுள்ள ஒவ்வொரு நபரும் ஜீவிக்கிற கிறிஸ்து இங்கு பிரசன்னமாயிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வார்களாக. இந்த உறுமால்கள் அனுப்பப்படும் ஒவ்வொரு வியாதியஸ்தருக்கும் அது ஆசீர்வாதமாயிருப்பதாக. ஜனங்களுக்காக நான் பிசாசை கடிந்து கொள்கிறேன். தேவனுடைய ஆவியினால் விசுவாசத்தில் நான் பிசாசைத் துரத்துகிறேன். நான் சந்தேகம் அனைத்தையும் துரத்துகிறேன். நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அதை இந்நேரத்தில் ஏற்றுக்கொள்வார்களாக. எல்லா மூடபழக்க வழக்கங்களும், உலகத்தின் எல்லா காரியங்களும், பாரமான யாவும், வேதம் கூறுவது போல், பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு யாரை நோக்கி ஓட வேண்டும்? ஸ்தாபன சபையை நோக்கியா? இல்லை. இப்பொழுது இங்குள்ள விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஒடக்கடவோம். (எபி.12:1). அவரையே நோக்கி... உண்மையென்று நாம் அறிந்துள்ள வார்த்தைகளை நாம் கூற வேண்டியதில்லை. ஆயினும் இந்த வார்த்தைகள் நமக்கு இன்று காலை தத்ரூபமாயுள்ளன. மரித்த அந்த இயேசு இன்று மரித்திருக்கவில்லை. அவர் உயிரோடெழுந்து, இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து அவருடைய சபையை தலைமை கட்டத்துக்கு கொண்டு வருகிறார். யூதாஸின் ஆவி அவர்கள் நடுவே கிரியை செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் எல்லா சிறு உபதேசங்களையும், எல்லாவற்றையும் இந்நேரத்தில் தள்ளிவிட்டு அவரை ஏற்றுக்கொள்வார்களாக. 124அவர்கள் இப்பொழுது கேட்பார்களாக. அவர்கள் ஏற்கனவே பிரசங்கத்தின் மூலம் கேட்டார்கள். அவர்கள் கேட்ட இந்த வார்த்தைகள் வெளிப்படுத்தப்பட்டு வசிட்டது என்றும் அது கிறிஸ்துவென்றும் அவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாக. அவர்கள் அதன்படி இப்பொழுது நடந்து. அதை ஏற்றுக் கொண்டு, எழுந்து நின்று சாட்சி பகர்ந்து. பரிசுத்த ஆவியினால் நிறைந்து தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பார்களாக. வியாதியஸ்தர் சுகம் பெறுவார்களாக. அவதியுறுவோர் சுகம் பெறுவார்களாக. எல்லோருடைய இருதயத்திலுள்ள வாஞ்சையும் நிறைவேறுவதாக. சர்வவல்லமையுள்ள தேவனே, இதை அருளும். 125இப்பொழுது உங்கள் தலைகளை வணங்கி, உங்கள் இருதயங்களைத் திறந்து ஞானஸ்நான ஆராதனைக்கு முன்பு சிறிது நேரம் ஜெபத்தில் தரித்திருங்கள். இன்றைய இரவு மற்றொரு ஆராதனை இருக்கும். இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், இந்த தருணத்தை நழுவவிடாதீர்கள். நான் இரண்டரை மணி நேரமாக, அல்லது அதற்கு இன்னும் அதிகமாக இங்கு நின்று கொண்டு, என் நேரத்தை எடுத்துக் கொண்டு, சுவிசேஷத்தை எடுத்துரைத்து, அதை பிழையின்றி பொருத்திக் காண்பித்தேன். இப்பொழுது நாம் ஆராதனையின் முடிவுக்கு வந்துவிட்டோம். கேட்டு, அடையாளம் கண்டு கொண்டு, அதன்படி நடத்தல் என்னும் பொருள் உங்கள் சிந்தனையை விட்டு அகல வேண்டாம். நீங்கள் அதைக் கேட்டீர்கள். அவருடைய சமூகம் இங்குள்ளதை நீங்கள் அடையாளம் கண்டு கொண்டீர்களா? உங்களை அழைப்பது அவர் என்பதை அறிந்திருக்கிறீர்களா?அப்படியானால் அதன்படி செயல்படுங்கள். தேவன் உங்களோடு இருப்பாராக. சிறிது காலம் ஜெபத்தில் தரித்திருங்கள். சகோ. நெவில், ஜெபம் செய்து முடித்து விடுங்கள். போய் ஜெபம் செய்யுங்கள் (சகோ. நெவில் ஜெபிக்கிறார் : “பரலோகப் பிதாவே, உமது ஊழியக்காரனின் உதடுகளின் மூலமாக இன்று காலையில் புறப்பட்டு வந்த செய்திக்காக நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். தேவனே, பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட இந்த செய்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள நாங்கள் உண்மையும் உத்தமமுள்ளவர்களாய் இருக்க எங்களுக்குதவி செய்யும்'' - ஆசி).